பிரபந்தத் திரட்டு
Jump to navigation
Jump to search
பிரபந்தத் திரட்டு என்பது தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல் ஆகும். இது 18 ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில் மொத்தம் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980 ஆண்டு பதிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன. எல்லாமே பல்வகையான பாடல் வடிவில் உள்ளன.
உள்ளடக்கம்
- திரட்டியல்
- புறநடையியல்
- கருப்பொருளியல்
- பொருத்தவியல்
- உவமாரூட வியப்பு சார்வியல்
- விசேடவணி வியப்பு சார்வோரியல்
- சாதிமரபு சார்வோரியல்
- குறுநில வியப்பு சார்வோரியல்
- ஒழிபியல்
- கொடையியல்
உசாத்துணைகள்
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.
- தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு,2007