பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் | |
---|---|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2019–தற்போது வரை |
அறியப்படுவது |
|
யூடியூப் தகவல் | |
ஒளிவழித்தடம் | |
பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். [1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி மற்றும் 2022இல் வெளியான லவ் டுடே ஆகிய படங்களில் மூலம் பிரபலமானார். [2][3][4] லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். [5] பிரதீப் ஐந்து இலட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட யூடியூப் சமூக ஊடகத் தளத்தைக் கொண்டுள்ளார்.[6]
தொழில் வாழ்க்கை
வாட்ஸ்அப் காதல் (2015) உட்பட பல குறும்படங்களை தயாரித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரதீப், நடிப்பு, படத் தொகுப்பு மற்றும் இயக்கம் போன்ற பல பணிகளைச் செய்தார். ஜெயம் ரவி நடிப்பில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோமாளி (2019) திரைப்படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். [7]
ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி படம் மூலம் 2019 ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பிரதீப் ரங்கநாதனும் படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.[8]
சர்ச்சை
கோமாளி படத்தில் நடிகர் இரசினிகாந்து 1996ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவதாக கூறியதை படத்தில் சித்தரித்தது சர்ச்சையானது. இரசினிகாந்தின் ரசிகர்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரினர்.[9][10] பின்னர் இந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Director Pradeep Ranganathan to Play Lead in His Next Directorial Love Today" இம் மூலத்தில் இருந்து 2022-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221031164955/https://www.news18.com/news/india/director-pradeep-ranganathan-to-play-lead-in-his-next-directorial-love-today-5516329.html.
- ↑ "Pradeep Ranganathan's film gets Vijay's film title" இம் மூலத்தில் இருந்து 2022-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220829171627/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pradeep-ranganathans-film-gets-vijays-film-title/articleshow/92646522.cms.
- ↑ "Love Today is not a revengeful romance; it's a sweet dedication to my ex-girlfriend: Pradeep Ranganathan" இம் மூலத்தில் இருந்து 2022-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220829171626/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/love-today-is-not-a-revengeful-romance-its-a-sweet-dedication-to-my-ex-girlfriend-pradeep-ranganathan/articleshow/92756180.cms.
- ↑ "Director Pradeep Ranganathan: Dedicating Next Film To The Girl Who Left Me" இம் மூலத்தில் இருந்து 2022-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220704112635/https://www.outlookindia.com/art-entertainment/director-pradeep-ranganathan-dedicating-next-film-to-the-girl-who-left-me-news-206696.
- ↑ "Love Today is a very close-to-heart film: Pradeep Ranganathan" இம் மூலத்தில் இருந்து 2022-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221119183842/https://www.cinemaexpress.com/tamil/news/2022/jul/04/love-today-is-a-very-close-to-heart-filmpradeep-ranganathan-32533.html.
- ↑ "Pradeep Ranganathan - YouTube" இம் மூலத்தில் இருந்து 2023-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230518091916/https://www.youtube.com/@PradeepRanganathanchannel.
- ↑ "'Comali' director Pradeep Ranganathan to make his acting debut - The New Indian Express" இம் மூலத்தில் இருந்து 2022-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221226033355/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/oct/05/comali-directorpradeep-ranganathan-to-make-his-acting-debut-2367609.amp.
- ↑ "I've narrated a story to Vijay, confirms Love Today director Pradeep Ranganathan" (in en). 2022-11-08 இம் மூலத்தில் இருந்து 2022-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221226033353/https://indianexpress.com/article/entertainment/tamil/ive-narrated-a-story-to-vijay-confirms-love-today-director-pradeep-ranganathan-8256516/.
- ↑ "Joke on Rajini sir wasn't morally wrong to me: 'Comali' director Pradeep intv" (in en). 2019-08-14 இம் மூலத்தில் இருந்து 2022-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221226033359/https://www.thenewsminute.com/article/joke-rajini-sir-wasnt-morally-wrong-me-comali-director-pradeep-intv-107215.
- ↑ "Rajinikanth fans outrage as Comali trailer mocks Tamil superstar" (in en). 2019-08-04 இம் மூலத்தில் இருந்து 2023-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231014084402/https://www.hindustantimes.com/india-news/rajinikanth-fans-outrage-as-comali-trailer-mocks-tamil-superstar/story-mkmGIaTiaXbcdvxo4POwOP.html.