பிஜித் தமிழர்
தமிழ்ப் பின்புலத்துடன் தொடர்புடையை பிசி மக்களை பிசித் தமிழர் எனலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1903 ஆண்டுக்கும் 1916 இடையே பிரித்தானிய காலனித்துவ அரசால் இங்கு கொண்டுவரப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவர். இவர்களை பிறர் மந்தராசி என்று அழைக்கின்றனர். இது மதராசி என்பதன் மருவிய வடிவம் ஆகும்.
மக்கள் தொகை
1903 இல் கொண்டுவரப்பட்ட 589 தென் இந்தியர்களில் 164 பேர் தமிழர்களாக இருந்தனர்.
மொழி | எண்ணிக்கை | சதவீதம் |
---|---|---|
தெலுங்கு | 318 | 54.0% |
தமிழ் | 164 | 27.8% |
கன்னடம் | 31 | 5.4% |
மலையாளம் | 17 | 2.9% |
மராத்தி | 33 | 5.6% |
இந்துத்தானி | 25 | 4.2% |
மொத்தம் | 589 | 100.0% |
அதன் பின்பு மேலும் பல தமிழர் வந்தனர். 1956 ஆண்டு கணக்கீட்டின் படி 1,498 தமிழர்கள் அல்லது 5.8% மக்கள் தமிழர்களாக இருந்தனர்.
மொழி | எண்ணிக்கை | சதவீதம் |
---|---|---|
இந்துத்தானி | 17,164 | 65.9% |
இந்தி | 3,644 | 14.0% |
தமிழ் | 1,498 | 5.8% |
உருது | 1,223 | 4.7% |
குசராத்தி | 830 | 3.2% |
தெலுங்கு | 797 | 3.1% |
குருமுகி பஞ்சாபி | 468 | 1.8% |
மலையாளம் | 134 | 0.5% |
ஏனைய மொழிகள் | 273 | 1.0% |
மொத்தம் | 26,031 | 100.0% |
தற்போது இவர்களின் எண்ணிக்கை மூன்றரை நூறாயிரம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிர்ச்சியூட்டும் விதமாக 7000 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்துள்ளனர்.[சான்று தேவை]
பெயர்கள்
இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். தேவர், பிள்ளை, மூப்பனார், கவுண்டர், நாயுடு என்னும் பெயர்கள் இங்கு பிரபலம். இவை சாதிப் பெயர்கள் என்று தெரியாமலேயே சேர்த்துக் கொள்கின்றனர்.
அரசியல்
குறிப்பிடத்தக்க அளவினர் அரசியலில் ஈடுபட்டு அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்கவர்கள்:
தமிழ்க் கல்வி
தொடக்கக் காலத்தில் ரோமானிய எழுத்துக்களில் தமிழ் கற்றுத் தரப்பட்டது என தகவல் உள்ளது. காலனித்துவ அரசு இந்திக்கே அதரவு அளித்ததால் தென்னிந்திய மொழிகளில் கல்வி கற்றுத் தரப்படவில்லை. இருப்பினும், தன்னார்வலர்களின் முயற்சியால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுத் தரப்பட்டன.
அண்மைய ஆதாரத்தின்படி, 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் 1728 மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தனர். பதினேழு பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கன கீழே தரப்பட்டுள்ளன.
- நமோலி பள்ளி
- இந்திரேகேத் பள்ளி
- வதுயாகா பள்ளி
- ராவிராவி பள்ளி
- தாங்கிதாங்கி பள்ளி [1]
தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பண வசதியின்மை, இந்திக்கு ஆதரவு, தமிழ்க் கல்விக்கு அரசின் ஆதரவு இன்மை, சரியான பாடத்திட்டம் இல்லாமை, பயிற்சி அளிக்கப்படாத ஆசிரியர்க்கள் ஆகியவற்றால் தமிழ்க் கல்வி நலிவுற்றது.
தமிழின் நிலை
பிசியில் வாக்களிப்பதற்கு தேவைப்படும் தகுதிகளில் ஒன்று கல்வியறிவு. தமிழிலோ தெலுங்கிலோ படிப்பறிவு பெற்றிருந்தவரையும் தகுதியானவர் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டது பிசி அரசு.[2] இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிட்டனர். சில ஆயிரம் பேர் தமிழ் பேசுகின்றனர். இவர்களில் பலருக்கு போதிய தமிழறிவு இல்லை. இவர்களில் பலர் பிசி இந்தியையும் பேசுகின்றனர். தற்போதைக்கு பொது இடங்களில் தமிழ் பேசப்படுவதற்கான சான்றுகள் இல்லை.
ஊடகம்
பிசியில் உள்ள அனைவரையும் வானொலி இணைக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ”ரேடியோ ஒன்”னில் விசிய மொழியும் ஆங்கிலமும் ஒலிபரப்பப்பட்டன. ”ரேடியோ டூ”வில் இந்தியும் ஆங்கிலமும் ஒலிபரப்பட்டன. சில சமயங்களில் தமிழ், தெலுங்கு, சீனம், குசராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. சங்கம் என்ற தமிழ் இதழும் வெளியானது. [2]
மித்திரன் என்ற திங்கள் இதழை 1970களில் அப்பாபிள்ளை என்பவர் வெளியிட்டு வந்தார்.[3]
சமயம்
பெரும்பான்மையினர் இந்து சமயத்தினர் ஆவர். இந்து சமய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தைப்பூசம், சிவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
வாழ்க்கை முறை
சான்றுகள்
- ↑ sangam fiji schools
- ↑ 2.0 2.1 sangam fiji: south indians
- ↑ "சிதறிய செய்திகள்". லண்டன் முரசு. ஏப்ரல் 1975.