பாவா இலட்சுமணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாவா இலட்சுமணன் (Bava Lakshmanan) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் இலட்சுமணன். இவருக்கு வேண்டியவரான ஒருவர் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நாயகனாக நடிக்க சென்னைக்கு அழைத்துவந்தார். ஆனால் சிறுவன் போல இருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[1] இதனால் மதுரைக்குத் திரும்பிச் சென்ற இவர் சிலகாலம் கழித்து மீண்டும் படவாய்புக்காக சென்னைக்கு வந்து வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் வேலையைச் செய்து திரைப்பட வாய்ப்புகளையும் தேடிவந்தார். பிறகு திரைப்பட தயாரிப்பு மேலாளராக பல படங்களில் பணியாற்றினார். ஓரிரு படங்களில் சில காட்சிகளில் வந்துபோன நிலையில் மாயி படத்தில் இவர் வடிவேலுவுடன் நடித்து இவர் பேசிய வாம்மா மின்னல் என்ற காட்சியினால் பிரபலமானார்.[2] அடுத்து ஆனந்தம் படத்தில் திருடனாக வந்து வீட்டு வேலைக்காரனாக மாறும் பாத்திரம் இவருக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தது. அதன் பிறகு தயாரிப்பு மேலாளர் பணியை விட்டுவிட்டு முழுமையாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பல படங்களில் வடிவேலுவுடன் காட்சிகளில் நடித்தார்.

இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நீரிழிவு நோய் பாதிப்பால் இவருக்கு கால் கட்டைவிரல் அகற்றப்பட்டது.[3]

நடித்த சில படங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாவா_இலட்சுமணன்&oldid=23804" இருந்து மீள்விக்கப்பட்டது