பாவக் கதைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாவக் கதைகள்
இயக்கம்சுதா கொங்கரா
விக்னேஷ் சிவன்
கௌதம் மேனன்
வெற்றிமாறன்
தயாரிப்புஆஷி துவா
ரியா கொங்கரா
ரோனி ஸ்க்ரூவாலா
அவினாஷ் விஸ்வநாதன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
சுரேஷ் பாலா
கணேஷ் ராஜவேலு
ஜோமன் டி. ஜான்
கலையகம்ஆர்.எஸ்.வி.பி மூவிஸ்
பிளையிங் யுனிகார்ன் என்டேர்டைன்மெண்ட்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு18 திசம்பர் 2020 (2020-12-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாவக் கதைகள் (Paava Kadhaigal) என்பது 18 திசம்பர் 2020ஆம்[1] ஆண்டு நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி இணையத் தளத்தில் வெளியான தமிழ்த் தொகைத் திரைப்படம் ஆகும். இது ஆணவக்கொலையை[2] மையமாக கொண்டு நான்கு வெவ்வேறு கதைகளாக இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்..[3] ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் மற்றும் பிளையிங் யுனிகார்ன் என்டேர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.[4]

அத்தியாயம்

கதை[5] இயக்குனர் நடிகர்கள் எழுத்தாளர் ஒளிப்பதிவு இசை
தங்கம் சுதா கொங்கரா காளிதாஸ் ஜெயராம்
சாந்தனு பாக்யராஜ்
பவானி ஶ்ரீ
ஷான் கருப்புசாமி
சுதா கொங்கரா
ஜோமன் டி. ஜான் ஜஸ்டின் பிரபாகரன்
லவ் பண்ண விட்டுடணும் விக்னேஷ் சிவன் அஞ்சலி
கல்கி கோய்ச்லின்
பதம் குமார்
விக்னேஷ் சிவன் தேனி ஈஸ்வர் அனிருத் ரவிச்சந்திரன்
வான் மகள் கௌதம் மேனன் சிம்ரன்
கௌதம் மேனன்
ஆதித்யா பாஸ்கர்
கௌதம் மேனன் கணேஷ் ராஜவேலு கார்த்திக்
ஓர் இரவு வெற்றிமாறன் பிரகாஷ் ராஜ்
சாய் பல்லவி
ஹரி கிருஷ்ணன்
வெற்றிமாறன் சுரேஷ் பாலா ஆர். சிவத்மிகா

கதைகள்

  • தங்கம் (இயக்குநர்: சுதா கொங்கரா)
    • இந்த திரைப்படம் 1980 ஆம் ஆண்டு கோவையில் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தை சார்ந்த திருநங்கையாக இருக்கும் சதார் (காளிதாஸ் ஜெயராம்) என்பவர் சிறுவயது முதல் நண்பராக இருக்கும் சரவணனை (சாந்தனு பாக்யராஜ்) திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சரவணன் சதாரை நண்பராக நினைத்து வருகிறார். மேலும் சதாரின் சகோதரியான ஷகீராவை (பவானி ஶ்ரீயை) காதலிக்கிறார். இதனால் தனது ஆசையை மறந்து விட்டு தனது சகோதரி மற்றும் நண்பன் காதலுக்கு உதவி செய்யும் சதார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இரு வீட்டாரும் அதனால் சதாரின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யும் சரவணன் மற்றும் ஷகீரா. ஒரு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தையுடன் ஊருக்கு வரும் சரவணன் மற்றும் ஷகீரா. அப்போது தான் தெரியவருகின்றது சாதரை அவரின் குடும்பத்தினரே ஆணவக்கொலை செய்துள்ளனர் என்பது. இதனால் குழந்தையை காட்டாமலே குடும்பத்தினரை வெறுத்து மறுபடியும் சாதரை நினைத்தபடியே ஊருக்கு செல்கின்றனர்.
  • லவ் பண்ண விட்டுடணும் (இயக்குநர்: விக்னேஷ் சிவன்)
    • இரட்டை மகள்களான ஆதிலட்சுமி மற்றும் ஜோதி லட்சுமி (அஞ்சலி). இவர்களின் தந்தையான வீரசிம்மன் (பதம் குமார்) கலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு ஜாதி உள்ளவர்களை காதலிக்கிறார்கள். தனது மகள்களின் காதல் விடயம் தெரிந்தால் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்வாரா? இல்லை எதிர்ப்பாரா? என்பது தான் கதை.
  • வான் மகள் (இயக்குநர்: கௌதம் மேனன்)
    • மதுரையில் சாதாரண நடுத்தரகுடுமபத்தில் ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வரும் கணவன் மனைவியான சத்யா (கௌதம் மேனன்) மற்றும் மதி (சிம்ரன்). வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளான பொண்ணுவதி சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலீசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கும் அந்தக்குடும்பம், மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
  • ஓர் இரவு (இயக்குநர்: வெற்றிமாறன்)
    • சுமதி (சாய் பல்லவி) என்ற பெண் மற்றும் ஹரி (ஹரி கிருஷ்ணன்) என்ற வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டு கணவருடன் பெங்களூருவுக்கு சென்றுவிடுகிறார். மகளின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜானகிராமன் (பிரகாஷ் ராஜ்) மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு சென்று மகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததும் சந்தோஷப்படுகின்றார் சுமதி . இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த ஜானகிராமன் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

தங்கம் லவ் பண்ண விட்டுடணும் வான் மகள் ஓர் இரவு
  • அஞ்சலி - ஆதிலட்சுமி/ஜோதி லட்சுமி
  • கல்கி கோய்ச்லின் - பெனிலோப்
  • பதம் குமார் - வீரசிம்மன்
  • ஜபர் சாதிக் - நரிக்குட்டி
  • கே. மணிகண்டன் - வாகனம் ஓட்டுபவர்

மொழி மாற்றம்

இந்த திரைப்படத் தொடர்கள் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி மாற்றம் செய்யபப்ட்டு நெற்ஃபிளிக்சு என்ற ஓ டிடி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Tamil anthology Paava Kadhaigal; set for OTT release on Dec 18". Manorama Online. 28 November 2020. https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2020/11/28/tamil-anthology-paava-kadhaigal-set-for-ott-release.html. 
  2. J Rao, Subha (21 October 2020). "Tracing the culture of anthologies in Tamil cinema, from Penn to Paava Kathaigal". First Post. https://www.firstpost.com/entertainment/tracing-the-culture-of-anthologies-in-tamil-cinema-from-penn-to-paava-kathaigal-8937461.html. 
  3. "Paava Kadhaigal: Netflix announces first Tamil film, an ensemble anthology from directors Gautham Menon, Sudha Kongara, Vetri Maaran, Vignesh Shivan". Hindustan Times. 1 October 2020. https://www.hindustantimes.com/regional-movies/paava-kadhaigal-netflix-announces-first-tamil-film-an-ensemble-anthology-from-directors-gautham-menon-sudha-kongara-vetri-maaran-vignesh-shivan/story-kxmW71GvTu9Gf26CcsG0FN.html. 
  4. Ramanujam, Srinivasa (1 October 2020). "‘Paava Kadhaigal’ interview: How Vetri Maaran, Gautham Menon, Vignesh Shivan and Sudha Kongara joined the Netflix anthology". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/paava-kadhaigal-interview-how-vetri-maaran-gautham-menon-vignesh-shivan-and-sudha-kongara-joined-the-netflix-anthology/article32739556.ece. 
  5. "‘Paava Kadhaigal’ teaser: Netflix anthology to release on December 18". The Hindu. 27 November 2020. https://www.thehindu.com/entertainment/movies/paava-kadhaigal-teaser-netflix-anthology-to-release-on-december-18/article33192446.ece. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாவக்_கதைகள்&oldid=35529" இருந்து மீள்விக்கப்பட்டது