பா. வெங்கடேசன்
இயற்பெயர் | பா.வெங்கடேசன் Ba. Venkatesan |
---|---|
பிறந்தஇடம் | மதுரை,`தமிழ்நாடு இந்தியா |
பணி | புதின ஆசிரியர் சிறுகதை எழுத்தாளர் இலக்கிய விமர்சகர் கவிஞர் |
காலம் | 1988 முதல் தற்போது வரை |
வகை | புனைகதை பின்நவீனத்துவம் கனவுருப்புனைவு மாய யதார்த்தவாதம் வரலாற்று புனைகதை அமைப்பியல் |
கருப்பொருள் | இலக்கியம் மெய்யியல் வரலாறு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | விளக்கு விருது (2017)[1] ஸ்பேரோ விருது (2018) தமிழ் திரு விருது (2019) ஒசூர் கிரியேட்டர் விருது (2019) |
பா. வெங்கடேசன் (Ba. Venkatesan) பா. வெ என அறியப்படும் இவர் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமாவார். இவரது பாகீரதியின் மதியம், தாண்டவராயன் கதை போன்றவை விமர்சனரீதியாக பாராட்டப்பெற்ற சிறந்த படைப்புகளாகும்.[2][3] தற்போது இவர் தமிழ்நாட்டில் உள்ள ஒசூரில் வசித்து வருகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
குழந்தைப் பருவத்தில் தனது பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டிய இவர் அக்கதைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். பத்து வயதில் தொடங்கிய கதை கேட்கும் பழக்கம் இவரது தந்தையின் உதவியினால் வாசிக்கும் பழக்கமாகியது. தந்தையின் அலுவலக நூலகத்திலிருந்து வழங்கிய அம்புலிமாமா என்னும் பத்திரிக்கை இவரது வாசிப்பு பழக்கம் அதிகரிக்க உதவியது. மறுபுறம் இவர் தனது பாட்டியிடம் கதை கேட்கவும் தவறவில்லை.
பதினான்கு வயதில் பக்கத்து வீட்டு நண்பர்களில் ஒருவர் மதுரை பொது நூலகத்தை இவருக்கு அறிமுகப்படுத்தினார். நூலகர் வருவதற்கு முன்பே, நூலகத்தை அடைந்து அதன் நுழைவாயிலில் காத்திருப்பதும், நூலகம் மூடும் வரை நூலகத்திலேயே இருப்பதும் விடுமுறை நாட்களில் இவரது பொதுவான பழக்கமாக இருந்தது. சிலசந்தர்ப்பங்களில், இவரது அம்மா நூலகத்தில் இருக்கும் இவருக்கு பயந்து, நூலகர் உதவியுடனேயே இவரை உணவு அருந்துவதற்கு வீட்டிற்கு அழைத்து செல்வார். உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு அம்மாவுடன் புறப்படுவதற்கு முன்பு, வேறொரு நாள் திரும்பும்போது இவர் படித்த அதே புத்தகத்தைப் பெறுவதற்காக நூலகரிடமிருந்து சத்தியத்தைப் பெற்றுக் கொள்வார்.
இவரை பொறுத்தவரையில், எழுதும் பழக்கம் இந்த காலகட்டதில் தான் தொடங்கியது. இவர் தனது எழுத்து பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, முத்து காமிக்சு (லயன் காமிக்சு) வெளியிட்ட, வேதாள மாயாவின் காமிக் கீற்றுகளின் தமிழ் மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு சில நகைச்சுவை கதைகளை எழுதினார். பின்னர் இவர் தமிழ்வாணனின் கதைகளைப் போன்றே சில கதைகள் எழுதினார்.
கல்லூரியில் பயிலும்போது, பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவை பற்றி அறிந்ததற்கு பிறகே இவரது எழுத்தார்வம் அதிகரித்தது.
நூலியல்
புதினங்கள்
சிறப்புத் தொகுப்பு
- ராஜா மகள் (மழையின் குரல் தனிமை, ஆயிரம் சாரதா, நீல விதி உட்பட நான்கு புதினங்களும் அடங்கும்)[12]
சிறுகதைத் தொகுப்பு
- ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் [13]
கட்டுரைகளின் தொகுப்பு
- உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
- கதையும் புனைவும்
மேற்கோள்கள்
- ↑ "விளக்கு விருது". https://puthu.thinnai.com/?p=38133.
- ↑ பாலசுப்பிரமணியன். "பா.வெங்கடேசனின் முதல் நாவல் – தாண்டவராயன் கதை – கீற்று". http://keetru.com/index.php/2009-10-07-11-08-47/10/4837-2010-03-17-05-32-43.
- ↑ "Pa. venkatesan – கூட்டாஞ்சோறு". https://koottanchoru.wordpress.com/tag/pa-venkatesan/.
- ↑ "Welcome to Muse India" இம் மூலத்தில் இருந்து 9 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170109183910/http://www.museindia.com/viewarticle.asp?myr=2010&issid=30&id=1880.
- ↑ "::New Book Lands::". http://www.newbooklands.com/new/search1.php?search_key=authorlist&&search=VENKATESAN%20PA.
- ↑ Magazine, Agam. "தாண்டவராயன் கதை – பா.வெங்கடேசன்" இம் மூலத்தில் இருந்து 10 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170110033505/http://agamonline.com/dhandavarayan-kathai-book-review-by-tharajan. பார்த்த நாள்: 4 February 2017.
- ↑ "யமுனை செல்வன". https://yamunaiselvan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பா. வெங்கடேசன் Archives – shruti.tv". http://www.shruti.tv/?tag=%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "சாபக்காடு". https://saabakkaadu.wordpress.com/2017/09/18/bagirathiyin-mathiyam/.
- ↑ "வாராணசி". https://www.goodreads.com/book/show/43469752.
- ↑ "shankarwritings". https://www.shankarwritings.com/2019/06/blog-post_29.html.
- ↑ "சாபக்காடு". https://saabakkaadu.wordpress.com/2018/12/22/rajan-magal/.
- ↑ "ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்". https://www.goodreads.com/book/show/36592668.