பா. வீரமணி
பா. வீரமணி (7 மே, 1946) என்பவர் தமிழ்ப் புலவர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். சிந்தனையாளர் சிங்காரவேலரின் கருத்துக்களையும் தொண்டுகளையும் தம் நூல்களின் வழியாகப் பரப்பி வருபவர். சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் என்ற பெரிய நூலை 3 தொகுதிகளாக வெளியிடுவதில் முக்கியப் பங்கு ஆற்றியவர் . திருக்குறள், திருவள்ளுவர், இலக்கியம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 2017 சனவரி 15 ஆம் நாளில் தமிழ்நாட்டரசு இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கிக் கவுரவித்தது.
எழுதிய நூல்கள்
குறள்வழிச் சிந்தனைகள்,1996
பட்டுக்கோட்டையார் பாட்டுத்திறம், 1997
வள்ளுவரும் இயங்கியல் தத்துவ ஞானக் கூறுகளும் 1999
இலக்கியச் சிந்தனைகள் 2000
வள்ளுவரும் வரைவின் மகளிரும் ஒரு வரலாற்றுப் பார்வை, 2000
வள்ளுவர் கண்ட சமுதாயநீதி, 2001
குலோத்துங்கன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம், 2004
வள்ளுவரும் சமயமும், 2006
நானறிந்த பெருமக்கள், 2007
முப்பெரும் செம்மல்கள், 2009
சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும், 2009
வள்ளுவரின் உலகப்பார்வை, 2009
காமத்துப்பாலும் பெண்ணியமும்,2009
சிங்காரவேலரின் சிந்தனைகள் 2011
சிங்காரவேலரின் தத்துவப்பார்வை, 2012
சிங்காரவேலர் என்ற மாமனிதர், 2013
சிங்காரவேலரின் மொழிக்கொள்கை, 2013
விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்,2013
சிங்காரவேலரும் இசுலாமியரும்,2013
சிங்காரவேலரின் பன்முகப்பார்வை 2014
மனமென ஒன்றுண்டா? 2014
வள்ளுவர் விழைந்த சமத்துவம், 2015
சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும், 2016
கொள்கை வழிகாட்டி, 2017
சிங்காரவேலர், 2017 (சாகித்திய அகாதமி வெளியீடு )
உசாத்துணை
பா.வீரமணி நூல்கள்