பரிதி இளம்வழுதி
பரிதி இளம்ழுதி | |
---|---|
தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–2011 | |
தொகுதி | எழும்பூர் |
பதவியில் 1984–1989 | |
தொகுதி | பெரம்பூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சென்னை | நவம்பர் 11, 1959
இறப்பு | அக்டோபர் 13, 2018 சென்னை | (அகவை 58)
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | எஸ் எம் லலிதா |
பிள்ளைகள் | இந்திரசித் இளம்வழுதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | உவெசுலி உயர்நிலைப்பள்ளி, இராயப்பேட்டை, சென்னை-600014 |
பணி | அரசியல்வாதி |
பரிதி இளம்வழுதி (11 நவம்பர் 1959 - 13 அக்டோபர் 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். திராவிட இயக்கக்கொள்கையில் பற்றுக்கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த இளம்வழுதி என்பவருக்கு மகன் [1]; சிறந்த பேச்சாளர்; சட்டமன்ற உறுப்பினர்; இதழாளர்.
இளமைக்காலம்
பரிதி தனது பள்ளி இறுதியை சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்
இவர் தமிழக சட்டமன்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 28 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு. க.வின் சத்தியவாணி முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டு பெரம்பூரில் வெற்றிபெற்றார். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்டவிதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் மு. கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார்.
பேரவைத் துணைத்தலைவர்
இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார்.
அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார்.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர்
இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார்.
அ.தி.மு.க.வில்
தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] [3] ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த பிறகு, ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.[4] பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். [5]அதனால் டி.டி.வி.அணியில் இணைந்தார். [6]
இதழாளர்
இவர் அறிவுக்கொடி என்னும் இதழைச் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
மரணம்
உடல்நலக்குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2018 அக்டோபர் 13ஆம் நாள் அதிகாலை மரணமடைந்தார். [7]
மேற்கோள்கள்
- ↑ கருணாநிதிக்குச் செல்லப்பிள்ளை; ஜெயலலிதாவுக்குச் சிம்ம சொப்பனம் - பரிதி இளம்வழுதி கடந்த வந்த பின்னணி!
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/parithi-ilamvazhuthi-ponnusamy-join-aiadmk/article4859849.ece
- ↑ http://timesofindia.indiatimes.com/city/chennai/Days-after-Parithi-joins-AIADMK-son-held-for-abusing-CM/articleshow/20935630.cms
- ↑ முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!
- ↑ முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
- ↑ 'ஓ.பி.எஸ் நடிப்ப பாத்து ஏமாந்துட்டேன்' - பரிதி இளம்வழுதி பரபர!
- ↑ முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்