பன்னாடை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பனைமரப் பன்னாடை

பன்னாடை[1]என்பது தென்னை, பனை மரங்களின் குலைகளுடனும், அதன் பட்டைகளுடனும், ஒட்டியிருக்கும் நெருக்கம் குறைந்த சல்லடை போன்று காணப்படும் நார்ப்பகுதியாகும். கள்ளில் இருக்கும் தூசுகளை வடிகட்டுவதற்காகக் கள் இறக்குபவர்கள் பன்னாடையைப் பயன்படுத்தினர்.[2] நல்லதை விட்டு விட்டு, சக்கையைத் தன்னகத்தே வைத்துக் கொள்பவர்களைத் திட்டுவதற்குப் பன்னாடை என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.[3] பனை மரத்தின் பன்னாடையை விட தென்னை மரத்தின் பன்னாடை அடர்த்தி அதிகமாகக் காணப்படும். பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நன்னூலில் பன்னாடையைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.[4]

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "பன்னாடை", தமிழ் விக்சனரி, 2021-06-21, retrieved 2025-04-27
  2. கே.எஸ்.கிருஷ்ணவேனி (2024-07-27). "'பன்னாடை' என்பது அவமரியாதையான சொல்லா?". Kalki Online. Retrieved 2025-04-27.
  3. NOC (2024-11-10). "தமிழ் அறிவோம்: பன்னாடை என்றால் என்ன?". Way2News Tamil (in ஆங்கிலம்). Retrieved 2025-04-27.
  4. கே.எஸ்.கிருஷ்ணவேனி (2024-07-27). "'பன்னாடை' என்பது அவமரியாதையான சொல்லா?". Kalki Online. Retrieved 2025-04-27.
"https://tamilar.wiki/w/index.php?title=பன்னாடை&oldid=424418" இலிருந்து மீள்விக்கப்பட்டது