படலம்
ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது.[1]
நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது.[2] தொல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.
ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.
ஓதப்படும் வேதப் பாடல்
- திருக்குறள் ஓத்து என்னும் சொல்லை பார்ப்பான் ஓதும் மந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது.[4]
- தொல்காப்பியம் இதனை முன்மொழிந்துள்ளது.[5]
- பாடப்படுவது 'பாட்டு', கூட்டப்படுவது கூட்டு [6] என்பது போல, ஓதப்படுவதை 'ஓத்து' என்பது தமிழ்நெறி.
பிற நூல்கள் தரும் விளக்கம்
- ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை [7]
- ஓத்தின் சாலை [8]
- ஓத்துஉடை அந்தணர்க்கு [9]
- இன்னா, ஓத்து இலாப் பார்ப்பான் உரை.[10]
- அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே [11]
- கொல்லானேல்.-பல்லவர் ஓத்தினால் என்ன குறை? [12]
- மாய உயிர்க்கு ஊனம் என்று ஊனம் தீர்ந்தவர் ஓத்து கூறும் 5 நெறிகள் - ஆர்வம், செற்றம், கதம், உலோபம், மானம் [13]
- ஓத்தும் ஒழுக்கமும் உடையார் சென்றால் இழிவு உண்டாக்கும் இடங்கள் 5 - கூத்து, விழா, திருமண நிகழ்ச்சி, கொலைக்களம், போர்முனை [14]
- ஓத்து வினையால் செயலாற்ற முடியும் [15]
அடிக்குறிப்புகள்
- ↑
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470) - ↑
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4) - ↑ நன்னூல் காண்டிகை உரை
- ↑
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள்) - ↑ உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
- ↑ கூட்டுப்பொறியல்
- ↑ சிலப்பதிகாரம் 15-70
- ↑ தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)
- ↑ மணிமேகலை 13-25
- ↑ இன்னா நாற்பது 21
- ↑ இனியவை நாற்பது 7
- ↑ சிறுபஞ்சமூலம் 82
- ↑ சிறுபஞ்சமூலம் 61
- ↑ சிறுபஞ்சமூலம் 62
- ↑ ஓத்தான் வினை ஆம்; (சிறுபஞ்சமூலம் 72)