நெல்லை சந்திப்பு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெல்லை சந்திப்பு
இயக்கம்கே. பி. பி. நவீன்
தயாரிப்புதிருமலை
கதைகே. பி. பி. நவீன்
எம். ஜி. கன்னியப்பன் (உரையாடல்)
இசையுகேந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுசெல்வராஜா
படத்தொகுப்புகே. பி. பி. நவீன்
கலையகம்டி. கிரியேசன்ஸ்
வெளியீடு18 செப்டம்பர் 2012 (2012-09-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெல்லை சந்திப்பு (Nellai Santhippu) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி குற்றவியல் படமாகும். கே.பி.பி நவீன் இயக்கிய இப்படத்தில் ரோகித், பூஷன், மேகா நாயர் தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கே. பி. நவீன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை திருமலை தயாரித்த, இப்படத்தில் புதுமுகம் ரோகித் கதாநாயகனாக நடிக்க, பி. எல். தேனப்பன் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்தது.[2] மற்ற முக்கிய வேடங்களில் புதுமுகம் பூஷன், மேகா நாயர், தேவிகா நடித்தார்கள், சரவண சுப்பையா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[3]

இசை

இப்படத்தின் பாடல்களுக்கு யுகேந்திரன் இசையமைத்துள்ளார்.[2]

பாடல் பாடலாசிரியர்(கள்) பாடகர்(கள்)
"இதுதானே எங்க வீடு" ஆண்டாள் பிரியதர்சினி பிரசன்னா, யுகேந்திரன்
"களவாணி களவாணி" எம். ஜி. கன்னியப்பன் முகேஷ், அனுராதா ஸ்ரீராம்
"கண்ணாமூச்சி கண்ணமூச்சி" ஏக்நாத் யுகேந்திரன், ரீட்டா
"விழிகளில் உதிருதே" அன்புடன் புஹாரி விஜய் யேசுதாஸ், பால அபிராமி
"மனிதா மனிதா" கே.பி.பி நவீன், டி.ஜே குமார் யுகேந்திரன்

வெளியீடு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த திரைப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரை மதிப்பீட்டை வழங்கியது மேலும் "மிகவும் ஈர்க்கக்கூடிய கதை. என்று குறிப்பிட்டது.[4] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில், "கதை முடிச்சு ஈர்க்கக்கூடிய பரபரப்பூட்டும் திரைப்படமாக மாற்றக்கூடியது, ஆனால் அதில் தோல்வியடைந்துள்ளது".[5] மாலைமலரின் விமர்சகர் படத்தின் கதையை பாராட்டினார், ஆனால் தொலைக் காட்சித் தொடர் போல கதையை நகர்த்தியிருப்பதை விமர்சித்தார்.[1]

மேற்கோள்கள்