நெலனைட்டு
நெலனைட்டு
| நெலனைட்டு Nelenite | |
|---|---|
நெலனைட்டு (பழுப்பு) மற்றும் பிராங்ளினைட்டு (உலோகக் கருப்பு) கனிமங்கள், அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலம் சசெக்சு மாகாணம் பிராங்க்ளின் சுரங்க மாவட்டத்தில் கிடைத்தது | |
| பொதுவானாவை | |
| வகை | பைலோசிலிக்கேட்டு |
| வேதி வாய்பாடு | (Mn,Fe)16As3Si12O36(OH)17 or (Mn,Fe)16(Si12O30)(OH)14[As3+3O6(OH)3] |
| இனங்காணல் | |
| நிறம் | இலேசான பழுப்பு |
| படிக இயல்பு | மணிகளாகவும் திரட்சியாகவும் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | சரிபிளவு {0001} |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 |
| மிளிர்வு | பளபளப்பு, பிசின் |
| கீற்றுவண்ணம் | இளம் பழுப்பு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 3.46 |
| ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nω = 1.718 nε = 1.700 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.018 |
| பலதிசை வண்ணப்படிகமை | புலப்படும் ε = நிறமற்றது மற்றும் ω = இளம் பழுப்பு |
| மேற்கோள்கள் | [1][2][3] |
நெலனைட்டு (Nelenite) என்பது (Mn,Fe)16As3Si12O36(OH)17 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய மாங்கனீசு இரும்பு பைலோசிலிகேட்டு ஆர்சனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் நியூ செர்சியில் உள்ள பிராங்க்ளின் பர்னசு சுரங்கத்தில் நெலனைட்டு கனிமம் காணப்படுகிறது. (Mn,Fe)16(Si12O30)(OH)14[As3+3O6(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நெலனைட்டு கனிமத்தை Nln[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பும் தோற்றமும்
நெலனைட்டு முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ செர்சியின் சசெக்சு மாகாணத்திலுள்ள பிராங்க்ளின் சுரங்க மாவட்டத்தில் அமைந்துள்ள திட்ரோட்டர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சிமித்சோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த இயோசப் ஏ. நெலனின் என்பவர் நினைவாக நெலனைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1][3] வர்ச்சினியாவின் மாண்ட்கோமெரி மாகாணத்திலும் ருமேனியாவின் சுசேவா மாவட்டத்திலும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[1] நியூ செர்சிப் பகுதியில் உள்ள சுரங்கப் பகுதியில் இது ஆக்டினோலைட்டு, கால்சைட்டு, வில்லெமைட்டு, டைரோடைட்டு, ரோடோனைட்டு, அபடைட்டு, இலென்னிலெனாபைட்டு, சிடில்ப்னோமெலேன், மைக்ரோக்லைன் மற்றும் டால்க்கு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Mindat.org - Nelenite
- ↑ Webmineral.com - Nelenite
- ↑ 3.0 3.1 3.2 Handbook of Mineralogy - Nelenite
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.