நெமிலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெமிலி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் நெமிலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

9,382 (2001)

1,104/km2 (2,859/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nemili

நெமிலி (ஆங்கிலம்:Nemili), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். நெமிலியில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது.

அமைவிடம்

நெமிலி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 64 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 16 கிமீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ளது.

இதனருகே அமைந்த நகரங்கள், கிழக்கில் காஞ்சிபுரம் 28கிமீ; மேற்கில் அரக்கோணம் 16 கிமீ; வடக்கில் வாலாசாபேட்டை 32 கிமீ மற்றும் தெற்கில் ஆற்காடு 36 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,620 வீடுகளும், 10,806 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு மற்றும் பாலின விகிதம் 84.68% ஆயிரம் ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. நெமிலி பேரூராட்சியின் இணையதளம்
  4. Nemili Population Census 2011

வார்ப்புரு:இராணிப்பேட்டை மாவட்டம்

"https://tamilar.wiki/index.php?title=நெமிலி&oldid=94572" இருந்து மீள்விக்கப்பட்டது