நீ நான் நிழல்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
நீ நான் நிழல் | |
---|---|
இயக்கம் | ஜான் ராபின்சன் |
தயாரிப்பு | பிந்து ஜான் வர்கீஸ் |
கதை | ஜான் ராபின்சன் |
திரைக்கதை | ஜான் ராபின்சன், சந்தோஷ் லட்சுமன் |
இசை | ஜெசின் ஜார்ஜ் |
நடிப்பு | சரத்குமார் அர்ஜுன் லால் இஷிதா சவுகான் |
ஒளிப்பதிவு | ஆல்பி |
படத்தொகுப்பு | நிகில் வேணு |
கலையகம் | நிமிதா புரொடெக்ஷன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 10, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ், மலையாளம் |
அக்டோபர் 10,2014ல் பிந்து ஜான் வர்கீஸ் தயாரிப்பில் வெளிவந்த நீ நான் நிழல் என்கிற திரைப்படத்தை ஜான் ராபின்சன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் ஆஷா பிளாக் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ் மொழியில் நீ நான் நிழல் என்ற தலைப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும்[1]. இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், அர்ஜுன் லால் மற்றும் நடிகை இஷிதா சவுகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் தேவன், கிருஷ்ணபாஸ்கர் மங்களசேரி மற்றும் மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம்
இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் சிறிய நேரத்தில் குவாலா லம்பூரில் கொல்லப்பட்டனர். முதலில் இனதாக்குதலால் கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது. பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விசாரணை அதிகாரி அன்வர் அலி இக்கொலைக்கும் இனதாக்குதலுக்கும் எவ்வித சம்மதமில்லை என்று நினைப்பார்.
உலகப் புகழ்பெற்ற ஃபேஸ்புக்கில் ஒரு பொதுவான காரணியை இவரும் இவரது படையும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, பலியான அனைவரும் ஆஷா பிளாகின் பரஸ்பர நண்பர்களாவர். 17 வயதான ஆஷா எந்நேரமும் ஃபேஸ்புக்கில் தனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
ஆஷாவும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோஹித்தும் நண்பர்களாக பழகி காதல் வயப்படுவார்கள். ஆஷாவின் 18வது பிறந்தநாளில் அவளைக் காண குவாலா லம்பூர்க்கு ரோஹித் வரும்போது அவள் தற்கொலை செய்துக்கொள்வாள். அதிர்ச்சியடைந்த ரோஹித் அவள் தற்கொலைக்கு காரணமான ஐந்து பேரை கொன்றுவிடுவான். இதற்குக் காரணம் ஆஷாவின் ஐந்து ஃபேஸ்புக் நண்பர்கள் அவளை பாலியல் ரீதியான துன்புறுத்தலும், அவளது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தலும் ஆகும். ஆஷா ஃபேஸ்புக்கில் அடிமையானதுக்கு காரணம் அவளது பெற்றோர் அவளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகும்.
நடிகர்கள்
- சரத்குமார்-அன்வர் அலி
- அர்ஜுன் லால்-ரோஹித்
- இஷிதா சவுகான்-ஆஷா
- தேவன்
- கிருஷ்ணபாஸ்கர் மங்களசேரி
- மனோஜ் கே.ஜெயன்
- எம்.எஸ்.பாஸ்கர்
- "பிளாக்" பாண்டி
- பாத்திமா பாபு
ஒலிப்பதிவு
இப்படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் தின் நாத் புதன்சேரி மற்றும் ஜெசின் ஜார்ஜ் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். மே 10, 2014ல் பாடல்களை வெளியிடப்பட்டது.
தயாரிப்பு
இப்படக்குழுவினர் கேரளாவிலும் மலேசியாவிலும் படக் காட்சி செப்டம்பர் 2013 முதல் எடுக்கப்பட்டது. சமுக வளைத்தளங்கள் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்தினை இப்படம் உருவாக்கப்பட்டது[2]. இப்படம் அக்டோபர் 10,2014ல் இருமொழியிலும் வெளியானது[3].
சான்றுகள்
- ↑ "Nee Naan Nizhal". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Nee-Naan-Nizhal/movie-review/44785600.cms.
- ↑ "On Location: Asha Black — The social network". https://www.thehindu.com/features/cinema/on-location-asha-black-the-social-network/article5145483.ece.
- ↑ "'Asha Black' Review Roundup: Crime Thriller Gets Average Reviews from Critics". https://www.ibtimes.co.in/asha-black-review-roundup-gets-average-reviews-critics-611254.