நானு அவனல்ல... அவளு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நானு அவனல்ல...அவளு (கன்னடம்: ನಾನು ಅವನಲ್ಲ... ಅವಳು, தமிழ்: நான் அவனல்ல...அவள்) என்பது 2015 ஆம் ஆண்டு பி.எஸ். லிங்கதேவரு என்பவரது இயக்கத்தில் வெளியாகிய கன்னடத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தின் கதையானது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திருநங்கை எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் ’ஐ அம் வித்யா’ என்ற சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது.[1] இத் திரைப்படத்தில் சஞ்சாரி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[2][3]

62 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதில் இத்திரைப்படதிற்கு இரு விருதுகள் கிட்டின. சிறந்த நடிகருக்கான விருது சஞ்சாய் விஜய்க்கும், சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது ராஜூ நாகராஜுக்கும் கிடைத்தது. [4]

கதை

இத் திரைப்படத்தின் கதையானது ஒவ்வொரு திருநங்கையரும் சந்திக்கின்ற வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தம் மீறாமல், தத்துருவமாக காட்சிபடுத்தியிருந்தார் இயக்குநர். சமூகத்தின் புறக்கணிப்புக்களையும், வாழ்க்கையின் ஏமாற்றங்களையும் தினந்தோறும் சகித்துக் கொண்டு வாழ்கின்ற ஒரு திருநங்கையின் வாழ்வைச் சொல்லும் ஒரு கதையாகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நானு_அவனல்ல..._அவளு&oldid=29754" இருந்து மீள்விக்கப்பட்டது