நாகம்போத்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நாகம் போத்தன் என்பவர், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் போத்தனார் எனக் குறிப்பிடப்படாமல் போத்தன் எனக் குறிப்பிடப்படுவதால் இவர் ஒரு குறுநில மன்னன் எனத் தெரியவருகிறது.[1] சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது.[2]

நவ்விமான் வரகுப் பயிரின் இலையைக் கறிக்கிறது. வெண்கூதாளம் பூ பூத்திருக்கிறது. இது கார் காலத்தின் அறிகுறி. இதனைக் கார்காலம் இல்லை என்பார் போல வெண்கூதாளம்பூவே பூக்கவில்லை என்றுகூட மக்கள் சொல்லுவார்கள் போலும்! என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். - இது இவரது பாடலில் சொல்லப்படும் செய்தி.

வரகு சிவப்பு நிறம் கொண்டது. அதன் பயிர் கருகருவெனப் பசுமைநிறம் கொண்டிருக்கும். இதனை மான் விரும்பி மேயும்.

இந்தப் பூவின் காம்பு நீளமானது. காம்பின் உள்ளே நீண்ட துளை இருக்கும். இதனைப் பறித்து விளையாட்டுப் பிள்ளைகள் தம் கால்களில் வீரக்கழல் போல அணிந்துகொள்வர்.

சான்றுக் குறிப்பு

  1. நாகம்போத்தன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. அது குறுந்தொகை 282 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
"https://tamilar.wiki/index.php?title=நாகம்போத்தன்&oldid=12567" இருந்து மீள்விக்கப்பட்டது