நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில் வளாகத்தில் அய்யனார்
கோயிலின் பின்புற முகப்பு

நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள நள்ளி கிராமத்தில், கண்மாய் அருகில் அமைந்துள்ளது.

குல தெய்வம்

மிக பிரசித்தி பெற்ற இந்த கோவிலானது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் கணிசமான மக்களின் குலதெய்வமாக இருக்கிறது.

தெய்வங்கள்

இக்கோயிலில் சிங்கமடை அய்யனார், நொண்டிக் கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பசாமி, பேச்சியம்மன் போன்ற கடவுளர்களுக்கு சன்னதிகள் உள்ளன. விநாயகர், சப்த கன்னியர், கருப்பசாமி, பேச்சியம்மன், முனிவர், பாம்பு, லிங்கம், வைரசாமி, நந்தி, நாகர், வீரபத்திரர், வில்லடி கருப்பசாமி, முத்துக்கருப்பன், லாட சன்னியாசி, வல்லாட முத்து உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. [1]

விழாக்கள்

இங்கு மாசி மாதம் சிவராத்திரி அன்று திருவிழா நடைபெறும். அப்பொழுது நடைபெறும் பாரிவேட்டை நிகழ்ச்சி புகழ்பெற்றது. இக்கோவிலை குலதெய்வமாக கொண்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளனர். அவர்கள் திருவிழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு

ராக்காச்சி, மாடான், மாடத்தி, பாதாள கண்டிகை ஆகிய, வீட்டில் பிறந்த பெண் குழந்தைகள் பிரார்த்திக்கின்ற, தெய்வங்களும் உள்ளன. [1]

அமைவிடம்

தேசியநெடுஞ்சாலை எண் 7 ல் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி இடையில் சாத்தூரிலிருந்து 16கிமீ மற்றும் கோவில்பட்டியிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து 1.6கிமீ உள்ளே செல்ல சாலை வசதி உள்ளது.

மேற்கோள்கள்