நற்சேந்தனார்
Jump to navigation
Jump to search
நற்சேந்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது நற்றிணை 128 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
தினைப்புனம் காவலின்போது ஒருவன் வந்து என் முதுகைத் தழுவினான். அவன் நினைவுதான் என்னை வாடச் செய்துள்ளது. - இவ்வாறு தலைவி தன் தோழியிடம் சொல்லி அறத்தொடு நிற்கிறாள்.
உவமை நலம்
தலைவி தலைவன் நினைவால் வாடியுள்ளதை விளக்கும் உவமைகள்
- சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கைப் போலக் காணப்பட்டாள்.
- பாம்பு விழுங்கிய (கிரகணம் பிடித்த) மதியம் போல அவள் நெற்றி ஒளி மங்கிப் போயிற்று.
- ஒரு உயிரை இரண்டாகப் பிரித்து வைத்தது போன்று இணை பிரியாதவர்கள்.