நரைமுடி நெட்டையார்
நரைமுடி நெட்டிமையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது அகநானூறு 339 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர் நெட்டிமையார். அவரிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்ட இவரை நரைமுடி நெட்டிமையார் என்றனர்.
அகநானூறு 339 சொல்லும் செய்தி
இவரது பாடலில் வரும் அரிய தொடர்களும் உவமைகளும் உள்ளத்தைத் தொடுகின்றன.
விரலின் பயறு காய் ஊழ்ப்ப
தட்டைப் பயறு, பாசிப் பயறு, உழுந்து போன்ற பயறு வகை மனிதனின் கை விரல்கள் போலக் காய்க்கும். பனிக்காலம் மாறி வெயில் காலம் வரும்போது வெடித்து உதிரும்.
ஆண்மை வாங்கக் காமம் தட்ப
ஒருபக்கம் பொருள் உயிரை இழுக்கிறது. மற்றொரு பக்கம் காமம் உயிரைக் குளுமையாக்குகிறது.
கவைபடு நெஞ்சம்
இதுதான் இரண்டாகப் பிளவுபடும் எண்ணம்.
இருதலைக் கொள்ளி
ஒருபக்கம் பொருள் உயிரை இழுக்கிறது. மற்றொரு பக்கம் காமம் உயிரைக் குளுமையாக்குகிறது. இருதலைக் கொள்ளிக் கட்டைக்கு இடையில் ஓடும் எறும்பு போல் அவன் அகப்பட்டுத் துடிக்கிறான்.
உயிர் இயைந்து அன்ன நட்பு
காதலனுக்கும் காதலிக்கும் இடையில் உள்ள நட்பு உடலோடு உயிர் ஒன்றியிருப்பது போன்றது. பிரிந்தால் உடலோ உயிரோ தனித்து இயங்க முடியாது.
வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு
உடலும் உயிரும் ஒன்றி வாழ்வது போன்றது காதல். பிரிவு சாதல் ஆகிவிடுமல்லவா?
இன்றைய பாடல்
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் - பாரதியார்