நந்தீசர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நந்தீசரே திருமூலரின் குரு ஆவார். நந்தீசர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நந்தீசர் பற்றிய கதைகள்

சிவகணங்களில் ஒருவர் நந்தீசர் என்றும் அவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாகவும் பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினைக் காவல் காத்து வந்தார். அப்போது அம்மையைத் தரிசிக்க அடிலகன் என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று நந்தீசர் தடுத்தார். இதையறிந்த சிவன் கோபங்கொண்டு அவரை பன்னிரெண்டாண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து வரும்படி சபித்துவிட்டாராம். பூலோகத்தில் சிலாத முனிவர் யாக பூமி உழுத போது, கண்டெடுத்த பெட்டியில் அந்தக் குழந்தை இருந்தது. அதற்கு வீரகன் என்று பெயரிட்டு, சிலாதர் தம்பதிகள் வளர்த்து வந்தனர். தங்கள் குழந்தை பன்னிரண்டு வயதில் இறந்துவிடும் என்பதறிந்து மனம் வருந்தினர். அவர்கள் வருத்தத்தை அறிந்த வீரகன் (நந்தீசர்) அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி,.கடுந் தவம் செய்ய ஆரம்பித்தான். ஆதன் விளைவாக சிவனார் அவனுக்குக் காட்சி கொடுத்து, நீ சிவலோகத்தில் சிரஞ்சீவியாய் வாழ்ந்திருப்பாய், சிவகணங்களின் தலைவனாகவும் விளங்குவாய், உனக்கு அனைத்து ஞானத்துடன்,சிவஞானமும் அருளினோம் என்று கூறு மறைந்தார். நந்தீசர் தேவர்சஞ்சை (பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தார். இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நூல்கள்

  • நிகண்டு 300
  • கருக்கிடை 300
  • சம்வாதம் 200
  • வைத்தியம் 12
  • கலைச்சூத்திரம் 500
  • ஞான சூத்திரம் 100
  • முப்பு சூத்திரம் 37
  • கருக்கிடைச் சூத்திரம் 33
  • வைத்திய காவியம் 1200
  • கலைஞானம் 1000
  • தண்டபக்சினி 100
  • சங்கம விளக்கம் 42

காண்க

உசாத்துணை

  • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
"https://tamilar.wiki/index.php?title=நந்தீசர்&oldid=27933" இருந்து மீள்விக்கப்பட்டது