நந்திதா கிருஷ்ணா
நந்திதா கிருஷ்ணா | |
---|---|
2014இல் நந்திதா கிருஷ்ணா | |
பிறப்பு | 1951 |
தொழில் | அறக்கட்டளையை நடத்துபவர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் |
தேசியம் | இந்தியா |
கருப்பொருள் | இந்தியாவின் கலை மற்றும் வரலாறு |
பேராசிரியர். நந்திதா கிருஷ்ணா (Nanditha Krishna) (பிறப்பு 1951) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமாவார். 2015இல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [1] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [2] இவர் சென்னையில் சி. பி. இராமசாமி ஐயர் அறக்கட்டளைக்குத் தலைமை தாங்குகிறார்.
வாழ்க்கை
இவர் 1951 இல் பிறந்த இவர் நந்திதா ஜெகந்நாதன் என அறியப்படுகிறார். [3] சே. ப. இராமசுவாமி ஐயரின் பெரிய மகளாவார். பண்டைய இந்திய கலாச்சாரத்தில் மும்பை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [4] இவரது ஆய்வறிக்கை "விஷ்ணுநாராயணனின் உருவப்படம்" பற்றி இருந்தது. மும்பையைத் தளமாகக் கொண்ட "மேஜிக் லாம்ப்" தொலைக்காட்சித் தொடரில் இவர் நந்திதாவாகவேத் தோன்றினார். [5]
விருதுகள்
22015 இல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [6] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். [7]
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். [4] 2013 இல், இவர் சே. ப. இராமசாமி ஐயர் அறக்கட்டளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] இந்த அறக்கட்டளை சே. ப. இராமசாமி ஐயர் இந்தியப் பாரம்பரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தை 1981 இல் நிறுவியது. இந்த அறக்கட்டளையின் தலைமையகம் இந்தியாவின் சென்னையில் (சே. ப. இராமசாமி சாலை) சே. ப. இராமசாமி ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த "தி குரோவ்" என்ற இல்லத்தில் உள்ளது.
விருதுகள்
இவரது விருதுகளில் நாரி சக்தி விருது, ஸ்த்ரீ ரத்னா, ஆசியாவின் சிறந்த பெண் ஆகியவை அடங்கும். [9] வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை
இந்தியாவின் விலங்கு உரிமை தொண்டு நிறுவனமான புளூ கிராஸை வழிநடத்திய சின்னி கிருஷ்ணாவை இவர் திருமணம் செய்து கொண்டார். [10] இவரும் அந்தச் சமூகத்தின் தூதராக இருக்கிறார்.
படைப்புகள்
- இந்தியாவின் புனித தாவரங்கள் [11]
- இந்தியாவின் புனித விலங்குகள் [8]
- இந்து மதமும் இயற்கையும்
- பேய்களின் புத்தகம்
- விஷ்ணுவின் புத்தகம்
- மெட்ராஸ் தென், சென்னை நவ் ( திஷானி தோஷியுடன் இணைந்து ), 2013
- பாலாஜி வெங்கடேசுவரா
- விநாயகர்
- சரசுவதி மகால் நூலகத்தின் வர்ணம் பூசப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் [9]
- தமிழ்நாட்டின் கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
- விஷ்ணு-நாராயணரின் கலை மற்றும் உருவப்படம் [4]
மேற்கோள்கள்
- ↑ "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively" (in en). March 9, 2015. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/stree-shakti-puraskar-and-nari-shakti-puraskar-presented-to-6-and-8-indian-women-respectively-243468-2015-03-09.
- ↑ "Nari Shakti Puraskar awardees full list". 9 March 2017. https://www.bestcurrentaffairs.com/nari-shakti-puruskar-awardees-full-list.
- ↑ Congress, The Library of. "LC Linked Data Service: Authorities and Vocabularies (Library of Congress)". http://id.loc.gov/authorities/names/n81044291.html.
- ↑ 4.0 4.1 4.2 "Nanditha Krishna - Penguin India" இம் மூலத்தில் இருந்து 2017-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171101045041/https://penguin.co.in/author/nanditha-krishna/.
- ↑ Not Available (1975). The Illustrated Weekly Of India Vol.96, No.28-38(july-sept)1975. http://archive.org/details/in.ernet.dli.2015.100851.Not Available (1975). The Illustrated Weekly Of India Vol.96, No.28-38(july-sept)1975.
- ↑ "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively" (in en). March 9, 2015. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/stree-shakti-puraskar-and-nari-shakti-puraskar-presented-to-6-and-8-indian-women-respectively-243468-2015-03-09.
- ↑ "Nari Shakti Puraskar awardees full list". 9 March 2017. https://www.bestcurrentaffairs.com/nari-shakti-puruskar-awardees-full-list.
- ↑ 8.0 8.1 "Sacred Animals of India" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2019-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190928214009/https://penguin.co.in/book/religion/sacred-animals-india-2/.
- ↑ 9.0 9.1 "Nanditha Krishna – Indian Knowledge Systems" (in en-US). http://iks.iitgn.ac.in/nanditha-krishna-2020/.
- ↑ 100010509524078 (2019-01-05). "The final walk: End of a 35-year-old tradition" (in en). https://www.dtnext.in/News/City/2019/01/05082635/1101774/The-final-walk-End-of-a-35yearold-tradition.vpf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sacred Plants Of India" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2017-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171101044510/https://penguin.co.in/book/non-fiction/sacred-plants-india-2/.