நடராஜன் சுப்பிரமணியம்
என். நடராஜன் சுப்ரமணியம் | |
---|---|
பிறப்பு | நடராஜன் சுப்ரமணியம் பரமக்குடி தமிழ் நாடு இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் நடிகர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 – தற்சமயம் |
நடராஜன் சுப்ரமணியம் (ஆங்கிலம்:Natarajan Subramaniam) நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
வரலாறு
நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் தமிழ் நாடு, இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.[1] மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜே, இந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார்.[2]
திரைப்பட வரலாறு
ஒளிப்பதிவாளராக
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | லாஸ்ட் டிரைன் டூ மகாகாளி | இந்தி | குறும்படம் |
2002 | யூத் | தமிழ் | தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் |
2003 | பாஞ்ச் | இந்தி | இந்தி திரைப்படத்தில் அறிமுகம் வெளியிடப்படவில்லை |
2004 | பிளாக் பிரைடே | ||
2005 | பரிணீதா | ||
2007 | ஏகல்ய்வா: தி ராயல் கார்ட் | ||
ஜப் வீ மெட் | |||
2008 | ஃபிர் கபி | ||
ஹல்லா போல் | |||
கோல்மால் ரிட்டர்ன்ஸ் | |||
2009 | அன்பு ஆஜ் கல் | ||
2010 | லாஃபங்கே பரிண்டே | ||
நாக் அவுட் | |||
2011 | டெசி பாய்ஸ் | ||
2012 | துப்பாக்கி (திரைப்படம்) | தமிழ் | "வெண்ணிலவே" பாடலுக்கு மட்டும் |
2013 | ராஞ்சனா | இந்தி | |
2014 | ஹாலிடே:எ சோல்சர் இஸ் நெவர் ஆப் டியூட்டி | ||
2015 | புலி | தமிழ் | |
2016 | அ ஆ (தெலுங்குத் திரைப்படம்) | தெலுங்கு | தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம் |
2017 | மை ஸ்டோரி | மலையாளம் | |
2018 | சல் மோகன் ரங்கா | தெலுங்கு |
நடிகராக
ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | யூத் | வாடிக்கையாளர் | அங்கீகரிக்கப்படாத தோற்றம் |
2006 | நாளை | நட்டி | |
2008 | சக்கர வியூகம் | கண்ணா | |
2010 | மிளகா (திரைப்படம்) | அழகர் | |
2011 | முத்துக்கு முத்தாக (திரைப்படம்) | ராமன் | |
2014 | சதுரங்க வேட்டை | காந்தி பாபு | |
2014 | ஜீவா | பாரில் இருக்கும் மனிதர் | ஒரு ரோசா பாடலுக்கான சிறப்புத் தோற்றம் |
2015 | கதம் கதம் | இன்ஸ்பெக்டர் பாண்டியன் | |
2017 | என்கிட்ட மோதாதே | ரவி | |
2017 | போங்கு | தேவா | |
2017 | ரிச்சி | செல்வா | |
2019 | நம்ம வீட்டு பிள்ளை | அய்யனார் | |
2020 | சண்டிமுனி | சண்டிமுனி | |
2020 | காட் பாதர் | அதியமான் | |
2020 | வால்டர் | அர்ஜூன் சம்பத் | |
2021 | கர்ணன் | எஸ்பி கண்ணபிரான் | |
2021 | இன்பினிட்டி | சிபிஐ ஆபிசர் | Filming[3] |
ஆதாரம்
- ↑ "I love the action masala films: Natrajan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723145950/http://articles.timesofindia.indiatimes.com/2009-08-20/news-and-interviews/28193145_1_tamil-film-action-hero-milaga. பார்த்த நாள்: மார்ச் 8, 2013.
- ↑ "இந்தியில் மறு ஆக்கம் ஆகும் மிளகா". தினமணி. http://dinamani.com/cinema/article1092257.ece. பார்த்த நாள்: மார்ச் 8, 2013.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/natty-plays-a-cbi-officer-in-his-next/articleshow/78424821.cms
வெளியிணைப்பு
பன்னாட்டு திரைப்பட தரவுதளத்தில்(imdb) நடராஜன் சுப்பிரமணியம் பற்றி