ந. முத்து விஜயன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ந. முத்து விஜயன்
ந. முத்து விஜயன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. முத்து விஜயன்
பிறப்புபெயர் ந. முத்து விஜயன்
பிறந்ததிகதி சூலை 26, 1958
பிறந்தஇடம் போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
பணி ஆசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி முதுகலை (வணிகவியல்) பட்டம்,
முதுகலை (இதழியல்) பட்டம்,
இளங்கலை (கல்வியியல்) பட்டம்,
அறியப்படுவது எழுத்தாளர்
பெற்றோர் ஆ. தி. நல்லகாமாட்சி பிள்ளை (தந்தை),
ஆவடையம்மாள் (தாய்)
துணைவர் கலைச்செல்வி
பிள்ளைகள் புவனரட்சாம்பிகை (மகள்)

ந. முத்து விஜயன் (பிறப்பு: சூலை 26, 1958) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் எனும் ஊரில் பிறந்து, இங்குள்ள பள்ளி ஒன்றில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மதுரை வானொலியின் வானொலி நாடகங்களில் நடிகராகக் குரல் கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.

வெளியான நூல்கள்

  1. வாழ்வில் ஒரு திருநாள் (வானொலி நாடகங்கள்) - 2009
  2. பால உதயம் (சிறுவர் நாடகம்) - 2011

விருது

  • தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டப் பொது நூலகம் மூலம் 2010 ஆம் ஆண்டுக்கான நாடக நடிகருக்கான “கலை - இலக்கிய சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
"https://tamilar.wiki/index.php?title=ந._முத்து_விஜயன்&oldid=4801" இருந்து மீள்விக்கப்பட்டது