ந. பழநிவேலு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ந. பழநிவேலு
ந. பழநிவேலு
இயற்பெயர்/
அறியும் பெயர்
ந. பழநிவேலு
பிறந்ததிகதி 1908
பிறந்தஇடம் தஞ்சை, தமிழ்நாடு,  இந்தியா
பணி எழுத்தாளர்
வகை புதினம், வரலாறு, சிறுகதை, நாடகம், கட்டுரைகள், மொழி பெயர்ப்பு

ந. பழநிவேலு (Na.Palanivelu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், மேடை வானொலி நாடகங்கள், இசை, கவிதை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியுள்ளார். பல நூறு சிறுவர் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. 1987 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கலாசார விருதையும், 1980 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் முத்தமிழ் வித்தகர் விருதையும் பெற்றுள்ளார். 1997 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் தமிழவேள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதைத்தவிர சிங்கப்பூர் நுண்கலைக் கழகம் வழங்கும் கலா ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

1930 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த இவர் சில ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராகப் பணிபுரிந்தார். 1949 ஆம் ரேடியோ மலாயா என்னும் மலாயா வானொலியில் சேர்ந்தார். இவ்வானொலியில் ஓர் ஒலிபரப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி 1968 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன் பணிக்காலத்தில் சிறுகதை, நாடகம், புதினம், கவிதை என பன்முகங்கொண்ட எழுத்தாளராக இயங்கினார்.

இலக்கியப் பணி

பழநிவேலின் முதல் கவிதை 1931ஆம் ஆண்டு நவநீதம் எனும் இதழில் ‘வலிமை’ எனும் தலைப்பில் வெளிவந்தது. 1936ஆம் ஆண்டில் இவரது முதல் மேடை நாடகமான ‘சுகுண சுந்தரம்’ அரங்கேற்றம் பெற்றது. முதல் சிறுகதை 1939ஆம் ஆண்டு தமிழ் முரசு இதழில் வெளிவந்தது. அன்று முதல் நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், மேடை - வானொலி நாடகங்கள், இசை, கவிதை, நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய பலநூறு சிறுவர் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

எழுதியுள்ள நூல்கள்

  • கவிதை மலர்கள் -1947[1]
  • காதற் கிளியும் தியாகக் குயிலும்- 1977 [2] [3]
  • கவியின் நலிவு-1981
  • பாப்பா பாடல்கள்-1990[4]
  • கவிஞர் ந பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (இரு தொகுப்புகள்) 1997, 1999
  • பாவலர் ந பழநிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன் தேசிய நூலகம் வெளியிட்ட நூல், 2013)

பெற்ற விருதுகளும் கெரளவங்களும்

  • 1978 - சிங்கப்பூர் நாட்டியப் பள்ளியின் நாடக சிகாமணி
  • 1980 - முத்தமிழ்ச் செம்மல் தமிழர் சங்கத்தின் பட்டம்
  • 1987 - இலக்கியப் பங்களிப்புக்காக சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் அளிக்கப்பட்டது.
  • 1987 - சிங்கப்பூர் இந்திய நுண்ககலைக் கழகத்தின் கலா ரத்னா விருது
  • 1997 - சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ந._பழநிவேலு&oldid=4787" இருந்து மீள்விக்கப்பட்டது