தேரையர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தேரையர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவரது இயற்பெயர், ராமதேவன் என்கிறது அபிதான சிந்தாமணி. பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.

வரலாறு

இராமதேவனின் குரு தர்மசௌமினி என்ற முனிவர். இராமதேவன் அகத்தியரின் மாணாக்கர். ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்தார்.

காசிவர்மன் என்று அரசன் ஒருவனின் காது வழியே உள்ளே நுழைந்து உச்சந்தலைக்குள் நுழைந்து கொண்டு அவனைக் கடுமையான தலைவலிக்குள்ளாக்கிய தேரை ஒன்றைத் தனது சமயோசிதச் செயலால் வெளியேற்றியதை அடுத்து இவர் தேரையர் என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.[1]

தேரையர் பல அரிய மருந்துகளைக் கண்டறிந்து நூல்களாக எழுதினார்.

தலை முழுகுதல் குறித்த தேரையர் பாடல்

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்

கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்

பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்

பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்

தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்

தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்

நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க

நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."

- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

சமாதி

தேரையர் மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்காசி பகுதியில் உள்ள தோரனமலையில் சமாதியடைந்ததாக கருதுகின்றனர்.[2]

காண்க

மேற்கோள்கள்

  1. சுந்தர் காளி (26 ஆகத்து 2018). "தேரையும் தேரையர்களும்: சில தமிழ் மரபுகளின் குறிப்புகள்". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/literature/article24783805.ece. பார்த்த நாள்: 30 ஆகத்து 2018. 
  2. தினமலர், பக்தி மலர், ஏப்ரல் 15 2012, சித்தர்கள் தொடர்
"https://tamilar.wiki/index.php?title=தேரையர்&oldid=27972" இருந்து மீள்விக்கப்பட்டது