தென்புலம் (சிற்றிதழ்)
தென்புலம் என்பது தமிழ்நாட்டின், வட ஆற்காடு மாவட்டம், வேலூரிலிருந்து வெளிவந்த திங்களிதழ் ஆகும். இது ஒரு திராவிட இயக்க சிற்றிதழ் ஆகும். இந்த இதழின் ஆசிரியர் தோப்பூர் திருவேங்கடம் ஆவார்.[1]
வரலாறு
தென்புலம் ஒரு திங்களிதழ் ஆகும். இது 1973 துவக்கபட்டது. 1980கள் வரை 13 ஆண்டுகளுக்கு மேல் வெளியானதாக தெரிகிறது.[2] இதன் ஆசிரியராக அண்ணாதுரையின் நெருங்கிய நண்பரும் அண்ணா காலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவருமான மிசா. தோப்பூர் திருவேங்கடம் இருந்தார்.[3]
தென்புலத்தில் வரலாற்றுத் தொடர்பான தகவல் கட்டுரைகள் (இஸ்காராவும் லெனினும், இட்லர் ஏன் சர்வாதிகாரியானான், கரிபால்டியும் கிழவியும் போன்றவை ); கல்வித் துறை குறித்த கட்டுரைகள், திரு. வி. க. போன்றோரின் கருத்துரைகளின் மறுபிரகரம், சிறுகதைகள் மற்றும் சுவையான தகவல்கள் வெளியிடப்பட்டன. எப்பொழுதாவது மரபுக் கவிதை, புத்தக மதிப்புரை ஆகியவை இடம் பெற்றன.
இந்த இதழின் சிறப்பு அம்சமாக அம்பலவாணக் கவிராயர் எழுதிய உண்ணாமுலையும் மங்களம் மாமியும் உரையாடுகிறார்கள் என்ற பகுதி விளங்கியது. அதில் படித்த, நாகரிகமான, அனுபவஞானம் பெற்ற மங்களம் மாமியும் நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்துள்ள உண்ணாமுலையும் நாட்டு நடப்புகள், செய்திகள் பற்றி உரையாடுவது போல் எழுதப்படுகிற இதில் சகலவிதமான விசயங்களும் அலசப்படன.[1]
இந்த இதழின் சில இதழ்கள் தமிழம் வலைதளத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.[4]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 281–283. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
- ↑ "தமிழம் வலை - பழைய இதழ்கள்". www.thamizham.net. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ ": : ARINGNAR ANNA : :". www.arignaranna.net. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
- ↑ "தமிழம் வலை - பழைய இதழ்கள்". www.thamizham.net. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.