தூது
Jump to navigation
Jump to search
தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தின் மூலமும், சங்க இலக்கியத்தின் மூலமும் அறியலாம்.
தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பத்தி இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம்பெற்று கி.பி. 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூதினைக் குறிப்பிடுவர்.