துறையூர் ஓடைகிழார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

துறையூர் ஓடைகிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 136 எண்ணுள்ள இவரது ஒரே ஒரு பாடலில் இவர் ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.[1] இந்த ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

கூளியர் யார்?

'மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், குரங்கு அன்ன புன் குறுங் கூளியர், பரந்து அலைக்கும் பகை' என்னும் பாடல் தொடர் கூளியர் யார் என்பதை விளங்கிக்கொள்ளப் போதுமானதாக உள்ளது. மரமடர்ந்த காடுகளில் கூளியர் வாழ்ந்தனர். அவர்கள் குரங்கு போல் குள்ளமானவர்கள். வழிப்போக்கர் கொண்டுசெல்லும் பொருள்களை அவர்கள் கவர்ந்துகொள்வர்.

புலவர் வறுமை

பேன் பகை

புலவர் உடுத்தியிருந்த உடை யாழின் பத்தரைப் போர்த்தியிருந்த துணிபோல் ஓட்டை பட்டிருந்ததாம். அதில் துணிப் பேன்கள் மேய்ந்து உடுத்தியவரைக் கடித்தனவாம்.

பசிப் பகை

புலவரும் புலவரின் சுற்றத்தாரும் சரியாக உண்ணாமையால் உடல் மெலிந்து காணப்பட்டனராம். அவர்களின் கண்கள் நீர்க்குளமாகத் தோஓன்றியதாம்.

கூளியர் பகை

செல்லும் வழியில் கூளியரின் வழிப்பறிக் கொடுமையும் இருந்ததாம்.

புலவர் சொன்னது

ஆய் இத்தகைய எல்லாப் பகையும் அறிந்தவன் என்று எண்ணி அவனிடம் வந்து வாழ்த்தினாராம்.

'எமக்கு ஈவோர் பிறர்கமு ஈவோர், பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என்று புலவர் ஆய் வள்ளலிடம் அறத்தின் விளைவை எட்த்துரைத்தார்.

புலவர் வேண்டியது

எனக்கு ஒத்தது உனக்குத் தெரியும். அதை விடுத்து உன் தகுதிக்கு ஒத்தது எது என எண்ணிப்பார்த்து நல்க வேண்டும் - என்று புலவர் வேண்டுகிறார்.

துறையூர் ஓடை மணல்

துறையூரில் பாயும் ஆற்றோடையில் படிந்துள்ள மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல நாள் ஆய் வள்ளல் நலமுடன் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=துறையூர்_ஓடைகிழார்&oldid=11936" இருந்து மீள்விக்கப்பட்டது