தீனா முரளிதரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீனா முரளிதரன்
Thinaah Muralitharan
The six medallists in the women's doubles (Thinaah Muralitharan).jpg
2022 காமன்வெல்த் விளையாட்டு பதக்க விழாவில் தீனா.
தனிநபர் தகவல்
பிறப்பு3 சனவரி 1998 (1998-01-03) (அகவை 26)
கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆண்டுகள் செயலில்2013 – இன்று வரையில்
உயரம்1.64 மீ
விளையாட்டு
நாடுமலேசியா
நிகழ்வு(கள்)பெண்கள் & கலப்பு இரட்டையர்
தீனா முரளிதரன்
பதக்கப் பட்டியல்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு  மலேசியா
சுடிர்மான் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் சுடிர்மான் கோப்பை 2021 பின்லாந்து கலப்பு இரட்டையர்
2022 காமன்வெல்த் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் பெண்கள் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் கலப்பு இரட்டையர்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 ஆசிய வாகையாளர் போட்டிகள் மணிலா பெண்கள் குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 ஆசிய வாகையாளர் போட்டிகள் சிலாங்கூர் பெண்கள் குழு
BWF உலக ஜூனியர் வாகையர் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 BWF உலக ஜூனியர் வாகையர் போட்டிகள் எசுப்பானியா 2016 BWF உலக ஜூனியர் வாகையர் போட்டிகள் – கலப்பு இரட்டையர்

தீனா முரளிதரன் (Thinaah Muralitharan; சீனம்: 蒂娜·慕拉利達蘭) என்பவர் மலேசிய இறகுப் பந்தாட்ட வீரர். 2013-ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய அணியில் இடம் பெற்றவர்.[1] 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்து உள்ளார்.[2]

இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் (Badminton World Federation); 2022 சூலை மாதம் 12-ஆம் தேதி புள்ளிவிவரங்களின்படி தீனா முரளிதரன், உலகத் தர வரிசையாளர்களில் 11-ஆவது இடம் வகிக்கிறார். தற்சமயம் இவர் நாட்டின் முதல் நிலை இரட்டையர் ஆட்டக்காரராவார்.[3]

2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் பெர்லி தான் (Pearly Tan) என்பவருடன் ஜோடி சேர்ந்த தீனா முரளிதரன்; கடந்த 2021-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக விருதுக்கான போட்டிகளின் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார். இவருடைய தங்கை செலினா (Selinaah Muralitharan), சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் இறகுப் பந்தாட்ட வீரர் ஆகும்.[4]

சொந்த வாழ்க்கை

இவரின் தந்தையார் முரளிதரன்; ஒரு பொறியியலாளர். தாயார் டாக்டர் பரிமலா தேவி, இந்தத் தம்பதியரின் 2-ஆவது பிள்ளை தீனா முரளிதரன்.[5][5][6]

இவர் தமிழ், மலாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மாண்டரின் சீனம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். புக்கிட் ஜலீல் விளையாட்டுப் பள்ளியில் (Bukit Jalil Sports School) படிக்கும் போது தன் நண்பர்களிடம் இருந்து சீன மொழியைக் கற்றுக் கொண்டார்.[7][8]

பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள்

பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வு. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறக்குறைய 5,000-ஆக இருக்கும்.

பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப் படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும். தற்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றன.

ஆண்டு இடம் இணையர் எதிர்ப்பாளர் புள்ளிகள் முடிவு
2022 காமன்வெல்த் போட்டிகள் பெண்கள் இரட்டையர் தேசிய கண்காட்சி மையம், பர்மிங்காம், இங்கிலாந்து மலேசியா பெர்லி தான் இங்கிலாந்து குளோ பிர்ச்
இங்கிலாந்து லாரன் ஸ்மித்
21–5, 21–8 Gold தங்கம்

2022 காமன்வெல்த் விளையாட்டுகள்: இறகுப் பந்தாட்ட வெற்றியாளர்கள்

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற ஆறு பேர்.

இடமிருந்து வலம்:

பெண்கள் இரட்டையர்

ஆண்டு நிகழ்வு இணையர் எதிர்ப்பாளர் புள்ளிகள் முடிவு
2021 சுவிஷ் ஓப்பன் இறுதி ஆட்டம்
(Swiss Open)
மலேசியா பெர்லி தான் வார்ப்புரு:நாட்டுத் தகவல் BUL கேப்ரியேலா ஸ்டோவா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் BUL சிடெபானி சிடோவா
21–19, 21–12 1st தங்கம்

உலக இறகுப் பந்தாட்ட வாகையர் போட்டிகள்

(BWF International Challenge/Series)

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு நிகழ்வு எதிர்ப்பாளர் புள்ளிகள் முடிவு
2018 ஈரான் பசார் அனைத்துலகப் போட்டி
(Iran Fajr International)
மலேசியா லீ இங் இங்
(Lee Ying Ying)
11–8, 11–6, 9–11, 11–9 1st தங்கம்
2018 டச்சு அனைத்துலகப் போட்டி
(Dutch International)
வார்ப்புரு:நாட்டுத் தகவல் DEN ஜூலி டாவல் ஜெக்கப்சன்
(Julie Dawall Jakobsen)
21–17, 15–21, 11–21 வார்ப்புரு:Silver2 இரண்டாம் நிலை

பெண்கள் இரட்டையர்

ஆண்டு நிகழ்வு இணையர் எதிர்ப்பாளர் புள்ளிகள் முடிவு
2018 மலேசிய அனைத்துலகப் போட்டி
(Malaysia International)
மலேசியா பாயி லிம் பெய் இயி
(Payee Lim Peiy Yee)
படிமம்:Flag of the Republic of China.svg செங் இயூ சியே
(Cheng Yu-chieh)
படிமம்:Flag of the Republic of China.svg சுங் கான் இயூ
(Chung Kan-yu)
21–17, 21–14 1st வெற்றியாளர்
2019 மலேசிய அனைத்துலகப் போட்டி
(Malaysia International)
மலேசியா பெர்லி தான்
(Pearly Tan)
இந்தோனேசியா பெபிரியானா திவிபூஜி குசுமா
(Febriana Dwipuji Kusuma)
இந்தோனேசியா ரிப்கா சுகியார்த்தோ
(Ribka Sugiarto)
21–16, 11–21, 21–18 1st வெற்றியாளர்
2019 சிட்னி அனைத்துலகப் போட்டி
(Sydney International)
மலேசியா பெர்லி தான்
(Pearly Tan)
படிமம்:Flag of the Republic of China.svg செங் இயூ சியே
(Cheng Yu-chieh)
படிமம்:Flag of the Republic of China.svg செங் யூ சி
(Tseng Yu-chi)
17–21, 21–17, 13–21 வார்ப்புரு:Silver2 இரண்டாம் நிலை
2019 இந்தியா அனைத்துலகப் போட்டி
Tata Open India International Challenge)
மலேசியா பெர்லி தான்
(Pearly Tan)
மலேசியா தியோ மெய் சிங்
(Teoh Mei Xing)
மலேசியா யாப் லிங்
(Yap Ling)
21–18, 21–14 1st வெற்றியாளர்
2019 வங்காள தேசம் அனைத்துலகப் போட்டி
(Bangladesh International)
மலேசியா பெர்லி தான்
(Pearly Tan)
இந்தியா மனீஷா
(K. Maneesha)
இந்தியா ருத்பர்னா பண்டா
(Rutaparna Panda)
22–20, 21–19 1st வெற்றியாளர்

மேற்கோள்கள்

  1. "Thinaah Muralitharan" இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210420132633/http://bam.org.my/player/thinaah-muralitharan. 
  2. "Pearly-Thinaah smashes seventh gold for M’sia in Birmingham ; National number one women’s doubles pair Pearly Tan-M. Thinaah stole the show on the final day of the Games as they trounced England’s Chloe Birch-Lauren Smith 21-5, 21-8 to deliver the seventh gold for the national contingent here today." (in en-MY). https://www.thesundaily.my/sport/pearly-thinaah-smashes-seventh-gold-for-m-sia-in-birmingham-NB9560861. பார்த்த நாள்: 11 August 2022. 
  3. "THINAAH Muralitharan". https://bwf.tournamentsoftware.com/player-profile/4214ba79-2b43-4ae0-bf80-99d8681c43ab/ranking. பார்த்த நாள்: 11 August 2022. 
  4. "காமன்வெல்த்: இரட்டையர் போட்டியில் மலேசியாவிற்கு தங்கம்; காமன்வெல்த் போட்டியில் பெர்லி டான் - தீனா முரளிதரன் இணையினர் மகளிர்கான பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர்". https://nambikkai.com.my/detail/8497. பார்த்த நாள்: 11 August 2022. 
  5. 5.0 5.1 Intan Maizura Ahmad Kamal (29 November 2020). "Former shuttler gets into the Asia Book of Records for the longest love poem!". https://www.nst.com.my/lifestyle/sunday-vibes/2020/11/645251/former-shuttler-gets-asia-book-records-longest-love-poem. 
  6. "Thinaah harap Deepavali bawa tuah". 18 October 2017. https://www.stadiumastro.com/sukan/badminton/artikel/thinaah-harap-deepavali-bawa-tuah/63123. பார்த்த நாள்: 8 March 2021. 
  7. Fabian Peter (7 May 2020). "Rising badminton stars good in 4 languages". https://www.nst.com.my/sports/badminton/2020/05/590503/rising-badminton-stars-good-4-languages. 
  8. Nicolas Anil (5 June 2021). "Thinaah credits partnership success with Pearly to multilingual skill". https://english.stadiumastro.com/sports-badminton/thinaah-credits-partnership-success-pearly-multilingual-skill-195606. 

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தீனா_முரளிதரன்&oldid=24090" இருந்து மீள்விக்கப்பட்டது