திவ்ய பாரதி (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திவ்ய பாரதி தமிழகத்தைச் சேர்ந்த சமூக - அரசியல் செயற்பாட்டாளர் ஆவர். கக்கூஸ் என்னும் ஆவணப்படத்தினை இயக்கியதின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்த ஆவணப்படத்தில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துச் சொல்லியிருந்தார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று காவல்துறை தடைவிதித்து இருந்தது. தடையை மீறி படத்தை வெளியிடுவோம் என்று திவ்ய பாரதி தெரிவித்து இருந்தார். யூடியூபில் படம் பதிவேற்றப்பட்டது.

2009 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதாக திவ்ய‌ பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மாணவி திவ்ய பாரதி கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தனிப்பட்ட வாழ்க்கை

1991 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் பிறந்தவர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=திவ்ய_பாரதி_(இயக்குநர்)&oldid=27765" இருந்து மீள்விக்கப்பட்டது