திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றான திருவுந்தியார் என்னும் நூலை இயற்றியவர். வட பகுதியிலிருந்து தென்னாட்டுக்கு வந்திருந்த போது, திருக்கடவூரைச் சேர்ந்த ஆளுடையதேவ நாயனார் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந் நூலை இவர் இயற்றினார் என அ. சதாசிவம்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார்.

இவர் திருவுந்தியாரை இயற்றிய காலம் கி.பி 1148 என மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். இது சரியாயின் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கூறலாம். எனினும் இதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்படுகின்றது [2].

குறிப்புகள்

  1. பூலோகசிங்கம், பொ., 1975. ப. 206
  2. பூலோகசிங்கம், பொ., 1975. ப. 207

உசாத்துணைகள்

  • பூலோகசிங்கம், பொ., அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.

இவற்றையும் பார்க்கவும்