திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°59′04″N 79°16′00″E / 12.984479°N 79.266656°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவலம் |
பெயர்: | திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவல்லம் |
மாவட்டம்: | வேலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வில்வநாதேசுவரர் |
தாயார்: | வல்லாம்பிகை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | நீவாநதி, கவுரி தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் |
வில்வநாதேசுவரர் கோயில் (Vilwanatheswarar temple) என்பது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. [2]
தல வரலாறு
கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனை அபிசேகம் செய்ய தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை, கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். சிவபெருமானின் வாகனமான நந்தி தேவன் கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்று கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார். [2]
அமைப்பு
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. [2]
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ 2.0 2.1 2.2 அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- வேங்கடம் முதல் குமரி வரை 5/திருவலத்து வல்லநாதர்
- அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
திருவல்லம் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவன்பார்த்தான்பனங்காட்டூர் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருமாற்பேறு |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 10 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 242 |