இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர் விக்கியிலிருந்து நீக்கப்படலாம்.
தமிழ்-கொரியன் மொழிக்குடும்பம் என்பது தமிழ் மொழியையும், கொரியன் மொழியையும் இணைத்து சில ஆய்வாளர்களால் முன்மொழியப்படும் ஒரு மூதை மொழிக் குடும்பம் ஆகும். இந்த முன்மொழிவை மொர்கன் ஈ. கிளிப்பின்கர் (Morgan E. Clippinger) "Korean and Dravidian: lexical evidence for an old theory" என்ற ஆய்வுக்கட்டுரையில் தரவுகளுடன் விரிவாக முன்வைத்தார்.
தமிழுகும் கொரியனும் ஒட்டுநிலை மொழிகள் ஆகும். இரண்டின் வசன அமைப்பும் எழுவாய் -பயன்நிலை -வினை (SOV) முறையில் அமைகிறன. இரண்டிலும் உரிசொற்கள் ஒரே தொடரியலைக் கொண்டுள்ளன. தமிழிகுக்கும் கொரியனுக்கும் பல அடிப்படைச் சொற்கள் ஒன்றாக அல்லது ஒத்த உச்சரிப்பைக் கொண்டுள்ளன என்று வாதிடப்படுகிறது.