திணை கொள் நெறி
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது எனக் கொள்வது எப்படி எனத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது.
- உரிப்பொருள் என்பது திணையைத் தீர்மானிக்கும் உரிப்பொருள். பாடலில் புணர்தலும், அதனோடு தொடர்புடைய நிமித்தங்களும் கூறப்பட்டிருப்பின் அது குறிஞ்சித் திணை. இவ்வாறே பிற திணைகளும் கொள்ளப்படும்.[1]
- இந்த உரிப்பொருள் பிற திணையோடு மயங்குவதில்லை. [2]
- மலை, காடு, ஆறு, கடல் என்னும் நிலப்பகுதிகள் மயங்குவது இல்லை. [3]
- என்றாலும் ஒரு நிலப்பகுதியில் உள்ள பொருள்கள் மற்றொரு நிலப்பகுதியில் மயங்கும். [4]
- அன்றியும் எல்லா நிலப்பகுதிகளிலும் ஐந்து உரிப்பொருள் செயல்களும் நிகழும். [5]
- இறைச்சி, உள்ளுறை உவமம் போன்ற குறிப்புப் பொருள்களாலும் இன்ன திணை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் திணையைக் குறிப்பதற்கு நிலத்தை அடிப்படையாய்க் கொள்ளாமல் உரிப்பொருள் நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொள்வது நெறி.
அடிக்குறிப்பு
- ↑
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 16 - ↑ உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 15
- ↑
திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 14 - ↑
எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். - தொல்காப்பியம் அகத்திணையியல் 21 - ↑ விரவும் பொருளும் விரவும் என்ப. - தொல்காப்பியம் அகத்திணையியல் 48