தி. நீ. சீனிவாசன்
தி. நீ. சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | திருப்பதி[1] | மார்ச்சு 27, 1933
இறப்பு | நவம்பர் 11, 2018 சென்னை[2] | (அகவை 85)
தேசியம் | இந்தியா [3] |
பணி | பொருளாதார நிபுணர் |
பட்டம் | சாமுவேல் சி பார்க்கில் இளையோர் பொருளாரதாரப் பேராசிரியர் |
கல்விப் பின்னணி | |
கல்வி | சென்னைப் பல்கலைக்கழகம், இளம் அறிவியல்., 1953 முதுகலை அறிவியல் 1954 யேல் பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் 1962இல் |
ஆய்வு | முதலீட்டு அளவுகோல்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்களின் தேர்வு (1961) |
முனைவர் பட்ட நெறியாளர் | திஜல்லிங் கூப்மன்சு |
கல்விப் பணி | |
துறை | பொருளியல் |
கல்வி நிலையங்கள் | இந்தியப் புள்ளியியல் கழகம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் |
தி. நீ. சீனிவாசன், (T. N. Srinivasan திருக்கொடிகாவல் நீலகண்ட சீனிவாசன் (27 மார்ச் 1933 - 11 நவம்பர் 2018), [4] [5] ஓர் இந்தியப் பொருளாதார நிபுணர் ஆவார், அமெரிக்காவில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். சாமுவேல் சி. பார்க், யேல் பல்கலைக்கழகத்தில் இளையோர் பொருளியல் பேராசிரியராக இருந்தார். [6] முன்னதாக பொருளாதாரத் துறையின் தலைவராக இருந்தார். 1977 முதல் 1980 வரை உலக வங்கியின் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு ஆலோசகராக இருந்தார், மேலும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்,இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் உட்பட நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பல கல்வி நிறுவனங்களில் கற்பித்தார். 2007 ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்விக்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூசன் விருதைப் பெற்றார். [7]
கல்வி
1962 இல் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1953இல் இளம் அறிவியல் கணிதத்தில் (ஹானர்ஸ்) பட்டம், முதுநிலை அற்வியல் கணிதம் (1954) பட்டம் பெற்றார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் (1953-1955) தொழில்முறைப் பயிற்சி பெற்றார். பொருளாதார வளர்ச்சி ,பொருளாதார முன்னேற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். இந்தியா தொடர்பான கொள்கை விவாதங்களில் மிகவும் தீவிரமாக இருந்தார். டெவலப்மென்ட் எகனாமிக்ஸ் இதழின் இணை ஆசிரியராகவும் இருந்தார்.
சான்றுகள்
- ↑ Krishna, K. L. (December 2018). "A tribute to Prof. T.N. Srinivasan, economist polymath". Indian Economic Review 53 (1-2): 415–418. doi:10.1007/s41775-019-00039-4.
- ↑ Krishna, K. L. (December 2018). "A tribute to Prof. T.N. Srinivasan, economist polymath". Indian Economic Review 53 (1-2): 415–418. doi:10.1007/s41775-019-00039-4.
- ↑ Krishna, K. L. (December 2018). "A tribute to Prof. T.N. Srinivasan, economist polymath". Indian Economic Review 53 (1-2): 415–418. doi:10.1007/s41775-019-00039-4.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923233450/http://www.econ.yale.edu/~srinivas/TNS%20LONG%20CV%200905.pdf.
- ↑ "Economist TN Srinivasan is no more". 11 November 2018. https://www.thehindubusinessline.com/news/economist-tn-srinivasan-is-no-more/article25469155.ece.
- ↑ "T. N. Srinivasan". Department of Economics, Emeritus Faculty, Yale University. http://economics.yale.edu/people/t-n-srinivasan.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.