தி. க. சுப்பராய செட்டியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோடசாவதானம் சுப்பராய செட்டியார்
பிறப்புபண்ருட்டி
தமிழ்நாடு
இந்தியா
இறப்பு1894
அறியப்படுவதுதமிழ்ப் புலவர், உரையாசிரியர், பதிப்பாளர்
சமயம்சைவ சமயம்
பெற்றோர்கஞ்சமலை செட்டியார்

தி. க. சுப்பராய செட்டியார் (இறப்பு: 1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.

தோற்றம்

பண்ருட்டியில் வாழ்ந்த பெரும் வணிகர் சேனைத்தலைவர் குலத்தில் கஞ்சமலை செட்டியாருக்கு மகனாக பிறந்தார் .இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்.ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .

சிறப்புகள்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தம் மாணவராகிய இவரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச், சோடசாவதனி எனும் பட்டத்தை வழங்கினார்.

இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றியும் மற்றும் இவரை பற்றியும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்புப்பாயிரம் பின்வருமாறு உள்ளது:

பணிகளும் படைப்புகளும்

இவர் சென்னை அரசாங்கத்து, நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராக இருந்துள்ளார். விரிஞ்சேகர் சதகம் எனும் நூலை இயற்றியுள்ளார். சந்தனபுரி என வழங்கும் எயினனூர் ஆதிபுரத் தலபுராணத்தை இயற்றியுள்ளார்.

எழுதிய உரைகள்

இவர் பரஞ்சோதி முனிவரின், திருவிளையாடற் புராணத்திற்கும், கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்திற்கும் காஞ்சிப் புராணத்திற்கும், புலியூர் வெண்பாவிற்கும் உரை எழுதியுள்ளார்.

பதிப்பித்த நூல்கள்

சிலப்பதிகாரம் புகார் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி, 1872 இல் பதிப்பித்தார். காங்கேயேன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பரசுவாமி இயற்றிய திருப்போரூர் சந்நிதிமுறை முதலிய நூல்களைப் பதிப்பித்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய மாயூரப் புராணத்தையும், நாகைக் காரோணப் புராணத்தையும் அச்சிட்டு வெளியிட்டார்.[1]

மறைவு

இவர் 1894 ஆம் ஆண்டு மறைந்தார்.

மேற்கோள்கள்

  • மயிலை சீனி.வேங்கடசாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் மெய்யப்பன் தமிழாய்வகம் - 2001.