தா. திருநாவுக்கரசு
தா. திருநாவுக்கரசு T. Thirunavukarasu | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை | |
பதவியில் 1977–1982 | |
முன்னையவர் | ஆ. தியாகராஜா |
பின்னவர் | நீலன் திருச்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1933 |
இறப்பு | 1 ஆகத்து 1982 | (அகவை 48)
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழர் விடுதலைக் கூட்டணி |
இனம் | இலங்கைத் தமிழர் |
தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு (Thamodarampillai Thirunavukarasu, 1 செப்டம்பர் 1933 – 1 ஆகத்து 1982) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
திருநாவுக்கரசு இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் 1933 செப்டம்பர் 1 இல் பிறந்தார்.[1][2]
அரசியலில்
ரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் முதற்தடவையாகப் போட்டியிட்டார். இவர் 3,000 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவதாக வந்து தோற்றார்.[3] தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அரசியல் கூட்டணியில் 1972 ஆம் ஆண்டில் இணைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளராக திருநாவுக்கரசு பணியாற்றினார்.[2]
1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு ஆ. தியாகராஜாவை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசு வென்று நாடாளுமன்றம் சென்றார்.[4]
திருநாவுக்கரசு 1982 ஆகத்தி 1 இல் மாரடைப்பால் காலமானார்.[2][5] இவரது இடத்திற்கு நீலன் திருச்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Thirunavukarasu, Thamodarampillai". இலங்கைப் பாராளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2747.
- ↑ 2.0 2.1 2.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 231. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF.
- ↑ Rajasingham, K. T.. "Chapter 28: Prelude to eruption". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2007-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071023105228/http://www.atimes.com/ind-pak/DB23Df04.html. பார்த்த நாள்: 2013-08-25.