தமிழ்த் தேசிய மீட்புப் படை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்த் தேசிய மீட்புப் படை (Tamil National Retrieval Troops) என்பது 1980 களில் இந்தியாவில் இருந்து விடுதலை பெற குறுகிய காலம் போராடிய ஒரு தமிழ்த் தேசிய போராளிக்குழு ஆகும். [1] இந்த குழு தங்கள் மக்களுக்காக ஒரு அகன்ற தமிழ்த் தேசத்தை ஒன்றிணைத்து உருவாக்க விரும்பியது. தமிழ்த் தேசிய மீட்புப் படையானது தங்களது பெரும்பான்மையான மோதல்களை 1990 களில் நிகழ்த்தியது. இந்த அமைப்பு ஒரு பெருந் தேசிய தமிழக இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு மீட்புப் படையானது எக்காலத்திலும் பெரிதானதாக இல்லை; இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பாலும் 30 ஐ ஒட்டியே இருந்து வந்தது. தமிழ்த் தேசிய மீட்பு படையில் போராடிய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்த் தேசிய மீட்புப் படையானது தமிழ்நாடு மீட்புப் படை என்றும் அழைக்கப்படுகிறது * - இது அமைப்பின் மற்றொரு கிளை அல்ல, மாறாக குழு பயன்படுத்தும் மற்றொரு பெயர். [2]

வரலாறு

இக்குழுவினர் தமிழகத்தில் தங்கள் சொந்த நாட்டை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர். [1] இந்த குழுவை 1980 களின் பிற்பகுதியில் பி. ரவிச்சந்திரன் நிறுவினார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், தமிழ் விடுதலைக் குழுக்களுக்கான ஆதரவு படிப்படியாகக் குறைந்தது. புதிய தமிழ் விடுதலை சார்பு இயக்கங்கள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இது தோன்றிவிட்டது. இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விரைவில் ஒடுக்கிவிட்டார். இதன் இறுதியில் த. நா. மீ. ப தடை செய்யப்பட்டது. [2]

முக்கிய நிகழ்வுகள்

2020 சூலை 2 அன்று, தமிழ்த் தேசிய மீட்பு படை (டி.என்.ஆர்.டி) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் (போட்டா), 2002 இல் சேர்க்கப்பட்டது. இந்தக் குழு அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறது. [1] [3]

கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தலில் வீரப்பனுக்கு தமிழ் தேசிய மீட்பு படை உதவியது. பிணைக் கைதிகளை விடுவிக்கப்படுவதற்கு ஏராளமான அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று த. தே. மீ. படை, தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் வீரப்பன் ஆகியோருடன் கோரியது. [4] இந்த குழு ராஜ்குமாரை 108 நாட்கள் கடத்தி வைத்திருந்தது. [1]

தொடர்புகள்

வீரப்பன் - ராஜ்குமாரைக் கடத்தியதில் உடன் சதி செய்பவராக இருந்தார். [4]

தமிழீழ விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) - இலங்கையை தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளை தமிழ் தேசிய மீட்பு படையினர் ஆதரித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தேசிய மீட்புப் படையினரை ஒரு சிறிய போராளிக்குழுவாக நிறுவினர். [1] தமிழர்களுக்கான தனி தேசத்தை அமைக்க விரும்பும் தங்கள் நோக்கத்தை எதிர்க்கும் எவரையும் நிர்மூலமாக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசிய மீட்புப் படை உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். [5] தமிழ் தேசிய மீட்பு இயக்கத்திற்கான பயிற்சியையும், பொருட்களையும் தமிழ் புலிகள் இலங்கையில் அளித்தனர். தமிழ் தேசிய மீட்புப் படையினராக மாறிய இளைஞர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்தினர். [4] தமிழ் தேசிய மீட்பு படை கடத்தல் பணிகளில் பயன்படுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய விடுதலை இராணுவம் - இந்த குழுவில் சில உறுப்பினர்கள் சேர்ந்திருக்கலாம். இக்குழு தொடர்ந்து உடைக்கப்பட்டு குழுக்களாக கலைந்துனது. இதனால் எனவே பல்வேறு தமிழக குழுக்களின் வீரர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் விருப்பமான இடம் போன்றவற்றின் அடிப்படையில் குழு குழுவாக மாறினர். இரு குழுக்களும் தமிழகம் சுதந்திரமாகவும், இறையாண்மையுடனும் இருக்க வேண்டும் என்றும், அங்கு வசிப்பவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்றும் நம்புகிறார்கள். [5]

வெளி இணைப்புகள்

[6] தமிழீழ விடுதலை அமைப்பிற்கான உலகளாவிய தரவுத்தளம்

குறிப்புகள்