தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2001
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | மரபுக்கவிதை | சவகர்லால் கவிதைகள் | முனைவர் சவகர்லால் | சுவாதி பதிப்பகம், சென்னை. |
2 | புதுக்கவிதை | இரவுகளின் நிழற்படம் | தி. மாரிமுத்து (யூமா. வாசுகி) | தமிழினி, சென்னை. |
3 | புதினம் | தகப்பன் கொடி | அழகிய பெரியவன்(அரவிந்தன்) | தமிழினி,சென்னை. |
4 | சிறுகதை | ஆர். சூடாமணி கவிதைகள் | ஆர். சூடாமணி | ராஜராஜன் பதிப்பகம்ம், சென்னை. |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | காளிதாச சாகுந்தலம் | பேரா. முனைவர் பார்த்தசாரதி | வானதி பதிப்பகம், சென்னை. |
6 | சிறுவர் இலக்கியம் | சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு | அன்புமதி (சேக் அப்துல்லா) | ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ், சென்னை. |
7 | திறனாய்வு | தமிழில் விமர்சனத்துறை - சில போக்குகள் | தி. க. சிவசங்கரன் | பத்மா பதிப்பகம், சென்னை. |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | காலங்கள் | முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | ஒரு அடிமையின் வரலாறு | சூத்ரதாரி (மு. கோபாலகிருஷ்ணன்) | தமிழினி, சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | ----- | ----- | ----- |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | நர்மதாவின் தமிழ் அகராதி | செந்தமிழறிஞர் மாருதிதாசன் கே. மாணிக்க முதலியார் நா. அங்கமுத்து, என். கலைவாணி, எஸ். பத்மாவதி |
நர்மதா பதிப்பகம், சென்னை. |
12 | பயண இலக்கியம் | மனம் கவரும் மலேசியா | தெ. சமரசம் | குமரன் பதிப்பகம், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | வாழ்க்கைச் சுவடுகள் | வல்லிக்கண்ணன் | பூங்கொடி பதிப்பகம், சென்னை. |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | தமிழகத் துறைமுகங்கள் | முனைவர் பா. ஜெயக்குமார் | அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர். |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளியியல் | அ. வெங்கடேசன், ப. முனியப்பன் |
பார்வதி பச்சையப்பர் பதிப்பகம், சென்னை. |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | பிரபஞ்சம் ஒரு புதிர் | கே. என். இராமச்சந்திரன் | மருத்துவர் எம். தேன்மொழி, சென்னை. |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | தொல் தமிழர் சமயம் | முனைவர் சிலம்பு நா. செல்வராசு | காவ்யா பதிப்பகம், சென்னை. |
18 | சட்டவியல், அரசியல் | சுற்றுச்சூழல் சட்டம் | பேரா. ஆ. சந்திரசேகரன் | சி. சீதாராமன் அண்டு கோ, சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | எல்லையில்லா வணிகம் ஈ காமர்ஸ் | ம. லெனின் | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | மாரடைப்பும் இரத்தக் கொதிப்பு நோய்களும் | மருத்துவர். வெ. குழந்தைவேலு | தமிழர் பண்பாட்டுக் கழகம், நெய்வேலி. |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | அகுபங்சர் அற்புதங்கள் | மருத்துவர் கே. ஏ. மோகன்தாஸ் | ஸ்ரீ வாரு பதிப்பகம், சென்னை. |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | ஆயிரம் பிறைகண்ட அரசு | வித்துவான் மா. சிவகுருநாத பிள்ளை | திருவரசு புத்தக நிலையம், சென்னை. |
23 | கல்வியியல், உளவியல் | வேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள் | ம. லெனின் | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | வேளாண்மையில் மூங்கில் | முனைவர் பி. சண்முகவேல் | ----- |
25 | சுற்றுப்புறவியல் | ----- | ----- | ----- |
26 | கணிணியியல் | 100 எச்.டி.எம்.எல் உதாரணங்கள் | எஸ். தணிகை அரசு | நர்மதா பதிப்பகம், சென்னை. |
27 | நாட்டுப்புறவியல் | தமிழ்ச் சிந்தனை மரபு நாட்டுப்புறவியல் ஆய்வுகள் | ச. பிலவேந்திரன் | தன்னானே பதிப்பகம், சென்னை. |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
29 | இதழியல், தகவல் தொடர்பு | சரஸ்வதி களஞ்சியம் | வ. விஜயபாஸ்கரன் (தொகுப்பாசிரியர்) | கலைஞன் பதிப்பகம், சென்னை. |
30 | மனித உரிமைகள் | வன்முறை நேர்வும் தீர்வும் | கவிஞர் சுடர் (ச. முருகையா) | சொர்ணம் பதிப்பகம், வடலூர். |
குறிப்புகள்
- நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்), சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், இதழியல் மற்றும் தகவல் தொடர்பு, விளையாட்டு ஆகிய ஐந்து வகைப்பாட்டில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறைகளின்படி இல்லாததால் பரிசுக்குக் கருதப்படும் நிலை எழவில்லை.
ஆதாரம்
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.