தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1981
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1981 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. பொழுது புலர்ந்தது (முதல் பரிசு), 2. காவியப் பரிசு (இரண்டாம் பரிசு) |
1. பட்டுக்கோட்டை ராஜேந்திரன் 2. ரகுநாதன் |
1. சங்கீதா பதிப்பகம், சென்னை. 2. மீனாட்சி புத்தக நிலையம், சென்னை. |
2 | நாவல் | 1. சோழ இளவரசன் கனவு (முதல் பரிசு) 2. அந்தப்புரம் (இரண்டாம் பரிசு) |
1. விக்கிரமன் 2. தாமரை மணாளன் |
1. திருமகள் நிலையம், சென்னை 2. வானதி பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. திருக்குறளில் மரபுகள் (முதல் பரிசு) 2. தமிழ் நாவல்களில் காந்தியத் தாக்கம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர். கு. மோகனராசு 2. டாக்டர் சபா. அருணாசலம் |
1. சென்னை பல்கலைக்கழகம், சென்னை. 2. காளத்தி நூலகம், தேவகோட்டை. |
4 | தமிழ், தமிழ்ப் பண்பாடு பற்றி பிற மொழிகளில் வெளிவந்துள்ள நூல்கள் | 1. Drama in Ancient Tamil Society (முதல் பரிசு) 2. A Study of the Perunkatai (இரண்டாம் பரிசு) |
1. கார்த்திகேசு சிவத்தம்பி 2. டாக்டர். ஆர். விஜயலட்சுமி |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
5 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. செய்திக்குப் பின் பத்திரிகை இயல் (முதல் பரிசு) | 1.என். வேம்புசாமி | 1. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை. |
6 | குழந்தை இலக்கியம் | 1. பொது அறிவுக் கட்டுரைகள் (முதல் பரிசு) 2. சிறை மீட்ட செல்வன் (முதல் பரிசு) 3. மாணவர்களுக்குக் காமராசர் (இரண்டாம் பரிசு) |
1. பி. வி. கிரி 2. இ. எம். எஸ். அரிகரன் 3. ர. சண்முகம் |
1. புத்தகப் பூங்கா, சென்னை 2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 3. அறிவு நிலையம், சென்னை. |
7 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. சைவ சித்தாந்த அடிப்படைகள் (முதல் பரிசு) 2. துவைத வேதாந்தம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர். வ. ஆ. தேவசேனாபதி 2. டாக்டர். தி. ப. இராமச்சந்திரன் |
1 & 2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை. |
8 | நாடகம் | ----- | ----- | ----- |
9 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. இலக்கியம் கொழிக்கும் சோவியத் ஒன்றியம் (முதல் பரிசு) 2. சோழநாட்டுத் திருப்பதிகள் (இரண்டாம் பரிசு) |
1. நெ. து. சுந்தரவடிவேலு 2. ந. சுப்பு ரெட்டியார் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 2. பாரி நிலையம், சென்னை. |
10 | சிறுகதை | ----- | ----- | ----- |
11 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
12 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. டேப்ரிகார்டர் மெக்கானிசம் அண்டு ரிப்பேரிங் (முதல் பரிசு) 2. ஒளிப்படம் பிடிக்கும் கலை (முதல் பரிசு) 3. மோட்டார் ரீவைண்டிங் (இரண்டாம் பரிசு) |
1. வே. கோவிந்தசாமி 2. எம். எஸ். பி. சண்முகம் 3. முப. கருப்பையா |
1. ஜெமினி ரேடியோ டெலிவிசன் இன்ஸ்டிடியூட், சென்னை 2. நேசனல் ஆர்ட் அகாடமி, புதுடெல்லி. 3. ஜூபிடர் டெக்னிகல் இன்ஸ்டிடியூட், சென்னை. |
13 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. மாரடைப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி? (முதல் பரிசு) 2. மனநோயும் இன்றைய மருத்துவமும் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர். பி. எம். ரெக்ஸ் 2. டாக்டர் ஓ. சோமசுந்தரம் & டாக்டர். தி. ஜெயராமகிருஷ்ணன் |
1. பூம்புகார் பிரசுரம், சென்னை 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
14 | கவின் கலைகள் | ----- | ----- | ----- |
15 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | ----- | ----- | ----- |
16 | சிறப்பு வெளியீடுகள் | 1. யாப்பு நூல் (முதல் பரிசு) 2. காதா சப்த சதி (இரண்டாம் பரிசு) |
1. புலவர் சரவணத் தமிழன் 2. மு. கு. ஜகந்நாதராஜா |
1. இயற்றமிழ் பயிற்றகம், திருவாரூர் 2. விஸ்வசாந்தி பதிப்பகம், இராஜபாளையம். |