தமிழ் நாவலர் சரிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் நாவலர் சரிதை [1] என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும்.

51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஔவை சு துரைசாமிப் பிள்ளை உரை ஒன்று பட-அச்சு உருவில் தளத்தில் உள்ளது.

காப்புச் செய்யுள்கள்

இந்த வரலாற்று நூலைத் தொகுத்தவர் தன் நூல் இனிதே நிறைவேற விநாயகப் பெருமானை வாழ்த்தும் மூன்று பாடல்களைப் பாடி முதலில் காப்புச் செய்யுளாக அமைத்துள்ளார். [2]

பாடல்கள்

பாடல்கள் பெரும்பாலும் பிற்காலக் கவிஞர்களால் பாடப்பட்டவை. குறுந்தொகை புறநானூறு, திருவள்ளுவ மாலை, பதினோராம் திருமுறை முதலான நூல்களில் காணப்படும் பாடல்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புலவர்களின் பெயர்கள் ஒன்றாக இருத்தலால், காலக் கண்ணணோட்டம் இல்லாமல் அவை இணைக்கப்பட்டுள்ளன. இதனை ஔவை துரைசாமிப் பிள்ளை தம் உரையில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

புலவர்கள்

புலவர்களின் வரலாறு இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வுகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது கூறும் 51 புலவர்களின் பெயர்களை இங்கு அகர வரிசையில் காணலாம்.

  1. அந்தகக் கவி வீரராகவ முதலியார்
  2. அம்மைச்சி
  3. இரட்டையர்
  4. இறையனார் - சிவபெருமான்
  5. உண்ணாமுலை எல்லப்ப நயினார்
  6. உத்தர நல்லூர் நங்கை
  7. ஏகம்பவாணன்
  8. ஒட்டக்கூத்தர்
  9. ஒரு தாதி
  10. ஒரு புலவன்
  11. ஔவையார்
  12. கண்டியதேவன்
  13. கச்சியப்பன்
  14. கச்சிராயன்
  15. கபிலர்
  16. கம்பர்
  17. கவிராசபிள்ளை
  18. காளமேகப் புலவர்
  19. குடிதாங்கி
  20. குமார சரசுவதி
  21. குருநமச்சிவாயர்
  22. கோடைச் சிவந்தான் புலவன்
  23. கோவூர் கிழார்
  24. சங்கத்தார்
  25. சத்திமுற்றப் புலவர்
  26. சயங்கொண்டார்
  27. சாத்தந்தையார்
  28. சேரமான் கணைக்கால் இரும்பொறை
  29. சோழனும் தேவியும்
  30. சோழன் புலவன்
  31. தத்துவப் பிரகாசர்
  32. திருவள்ளுவர்
  33. திருவாரூர் நாகரச நம்பி
  34. தொல்காப்பிய தேவர்
  35. நக்கீரர்
  36. நாமகள் - கடவுள்
  37. பரமேசுரப் புலவர்
  38. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
  39. பாண்டியன் தேவி
  40. பாண்டியன் புலவன்
  41. பாண்டியன்
  42. பிராமணப் பிள்ளையன்
  43. புகழேந்தி
  44. புங்கனூர் கிழவன்
  45. பெருந்தலைச் சாத்தனார்
  46. பொய்யாமொழியார்
  47. முருகவேள் - கடவுள்
  48. முனையதரையன்
  49. மூவேந்தர்
  50. வாயற்பதி வடுகன்
  51. விண்ணன்

மேற்கோள்

  1. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949
  2. தனிமை பெறு சீர்த்தித் தமிழ் நாவலர் சீர்
    இனிமை பெறச் சேர்த்து எழுத - நனி துணையாம்
    இந்துமுகத் தந்தி எனும் செஞ்சடை மோலி
    ஐந்து முகத் தந்தி அடி \\ காப்பு 1

    கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும்
    விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பு அவிழ் தார்ச்
    சேரமான் சொன்ன சிலப்பதிகாரக் கதையைச்
    சாரமாய் நாவே தரி. \\ காப்பு 2

    மதி பாய் சடை முடித்து மாசுணப் பைம்பூட்டுச்
    சதிபாய் குறுந்தாட்டுத் தான - நதி பாய்
    இருங்கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம்
    உருக விட்டு நின்ற ஒளி. \\ காப்பு 3

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_நாவலர்_சரிதை&oldid=19843" இருந்து மீள்விக்கப்பட்டது