தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது என்பது இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறந்த ஒரு படைப்புக்கு வழங்கப்படும் விருது ஆகும். 1989 ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்த விருது சாகித்திய அகாதமியால் வழங்கப்படுகிறது. 2009 இல் இருந்து 50,000 இந்திய ரூபாய் பணப் பரிசினையும் இந்த விருது கொண்டுள்ளது.[1]

விருது பெற்றோர் [2]

ஆண்டு நூல் தலைப்பு மொழிபெயர்ப்பாளர் மூல தலைப்பு (மொழி) மூல மொழி எழுத்தாளர்
1990 ஆமுக்த மால்யதா [3] மு. கு. ஜகந்நாத ராஜா ஆமுக்த மால்யதா (தெலுங்கு) கிருஷ்ணதேவராயர்
1990 மண்ணும் மனிதரும் டி. பி. சித்தலிங்கய்யா மரளி மண்ணிகே (கன்னடம்) கே.சிவராம காரந்த்
1991 யயாதி கே.எஸ்.ஸ்ரீனிவாச்சார்யா யாயாதி (மராத்தி) வி. ச. காண்டேகர்
1992 மௌன ஓலம் கே.வெங்கடாசலம் வைஷாகி (கன்னடம்) சதுரங்கா
1993 இந்திய மொழி நாடகங்கள் சரஸ்வதி ராம்நாத் தொகுப்பு (பல்வேறு மொழிகள்) பல்வேறு எழுத்தாளர்கள்
1994 விஷக்கன்னி குறிஞ்சிவேலன் விஷக்கன்யா (மலையாளம்) எஸ்.கே.பொட்டேக்காட்
1995 மீதி சரித்திரம் பி.பானுமதி பாக்கி இதிஹாஸ் (வங்காளம்) பாதல் சர்கார்
1996 மங்கியதோர் நிலவினிலே தி. சா. ராஜு ஆத் சன்னானி ராத் (பஞ்சாபி) குர்தயால் சிங்
1997 சந்திரகிரி ஆற்றங்கரையில் தி. சு. சதாசிவம் சந்திரகிரிய தீரதல்லி (கன்னடம்) சாரா அபுபக்கர்
1998 மைய்யழி கரையோரம் ருத்ர துளசிதாஸ் இளம்பாரதி மைய்யழிபுழையாடே தீரங்களில் (மலையாளம்) எம். முகுந்தன்
1999 ஏழு கார்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் தமிழ்நாடன் தொகுப்பு (ஒரிய) சிறு கதைகள் ஹிருஷிகேஷ் பண்டா
2000 அக்னிசாக்ஷி சிற்பி பாலசுப்பிரமணியம் அக்னிசாட்சி (மலையாளம்) அந்தர்ஜானம் லலிதாம்பிகா
2001 எனது நினைவலைகள் லெட்சுமி நாராயணன் ஹாயாதி-ஜா சோனா ரோபா வார்க் (சிந்தி) போப்பாட்டி ஆர். ஹிராநந்தானி
2002 பனிஷ்வரநாத் ரேணு கதைகள் எச். பாலசுப்பிரமணியம் பனிஷ்வரநாத் ரேணு கி ஷ்ரேஷ்தா கஹானியான் (இந்தி) பனிஷ்வரநாத் ரேணு
2003 ஐயப்ப பனிக்கரின் கவிதைகள் நீல பத்மநாபன் ஐயப்ப பனிக்கருடே கிருத்திகள் (மலையாளம்) ஐயப்ப பனிக்கர்
2004 பருவம் பாவண்ணன் பர்வா (கன்னடம்) எஸ்.எல் பைரப்பா
2005 சிதம்பர இரகசியம் பா. கிருஷ்ணசாமி சிதம்பரப ரஹசியா (கன்னடம்) கே.பி.பூர்ணசந்திர தேஜஸ்வீ
2006 புரட்சிக்காரன் புவியரசு தேர்வுசெய்யப்பட்ட (வங்காள) கவிதைகள் காஜி நஸ்ருல் இஸ்லாம்
2007 சாவித்ரி: இதயத்தை அள்ளும் இரவா காவியம் ஏ.அய். ரவி ஆறுமுகம் சாவித்ரி (ஆங்கிலம்) ஸ்ரீ அரபிந்தோ
2008 இயந்திரம் பா. அனந்தகுமார் யந்த்ரம் (மலையாளம்) மலையாத்தூர் இராமகிருஷ்ணன்
2009 முதல் சபதம் புவனா நடராஜன் பிரதம் பிரதிஸ்ருதி (வங்காளம்) ஆஷா பூர்ணாதேவி
2010 உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் நிர்மாலயா செங்கோல் இல்லாத்தே கிரீடம் இல்லாத்தே (மலையாளம்) நூரநாடு ஹனீஃப்
2011 பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் இந்திரன் தாரே காலி தாகி தேலா (ஒடியா) கவிதை தொகுப்பு மனோரமா பிஸ்வால் மகாபத்ர
2012 அக்கா ஜி. நஞ்சுண்டன் அக்கா (கன்னடம்) சிறுகதை தொகுப்பு பலகன்னட பெண் எழுத்தாளர்கள்
2013 அவதேஸ்வரி இறையடியான் (தாஸ்) அவதேஸ்வரி (கன்னடம்) புதினம் ஷங்கர் மொக்‌ஷி புனேகர்
2014 லடாக்கிலிருந்து கவிழும் நிழல் சா. தேவதாஸ் ஷாடோ பிரம் லடாக் (ஆங்கில புதினம்) பவானி பட்டாச்சாரியா
2021 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் மாலன் Chronicle of a Corpse Bearer சைரஸ் மிஸ்திரி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்