தண்ணியூற்று

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தண்ணியூற்று
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - முல்லைத்தீவு
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


தண்ணியூற்று
தண்ணியூற்று is located in இலங்கை
தண்ணியூற்று
தண்ணியூற்று
ஆள்கூறுகள்: 9°13′21.09″N 80°47′19.22″E / 9.2225250°N 80.7886722°E / 9.2225250; 80.7886722


தண்ணியூற்று (Thanniyutru) அல்லது தண்ணீரூற்று, இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது ஒரு அழகான, செழிப்பான விளைநிலத்தால் சூழப்பெற்ற கிராமம். ஊற்றக்கரைப்பகுதியில் காணப்படும் இயற்கையான தண்ணீர் ஊற்றின் காரணமாக அமைந்தது இப்பெயராகும். இவ்விடத்தின் பெயருக்கேற்பவே இவ்விடத்தின் தண்ணீர் மிகவும் சுவையானது. முல்லைத்தீவு நகரத்திலிருந்து மாங்குளம் வீதியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பெயருக்கு ஏற்ப நீர் செழிப்பு மிகுதியான ஒரு வளம்மிக்க ஊராகும். (தண்ணீர்+ஊற்று = water-spring)

வன்னிப் பெருநிலப்பரப்பில் அழகான, செழிப்பான பகுதியாகிய இப்பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் மக்கள் செறிவான பிரதேசமாகும்.



ஆலயங்கள்

பாடசாலைகள்

  • தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை
  • தண்ணியூற்று சீ. சீ. தமிழ் கலவன் பாடசாலை
  • தண்ணீரூற்று முஸ்லீம் வித்தியாலயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தண்ணியூற்று&oldid=39604" இருந்து மீள்விக்கப்பட்டது