தசாங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தசாங்கம் என்பது மரபு வழித்தோன்றல்களின் பத்து அங்கங்களை குறிக்கும் பாடல் வகை.

கருணீகர் புராணத்தில் காணப்படும் தசாங்கம் அத்ரி மாதவ முனிவரால் கி . மு. ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பாரிசநாதரால் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகும். கி. பி. 1909 ஆம் ஆண்டில் திரு. அ. வரதநஞ்சயப்பிள்ளை அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்ட கருணீகர் புராணத்தில் பக்கம் 247ல் காணப்படுகிறது. கருணீகர்க்கு உரிய மலை, ஆறு, நாடு, நகர், மாலை, குதிரை,கொடி, யானை, முரசு, கொடி, ஆணை முதலிய பத்து அங்கங்களை பாடலாக குறிப்பிடுகிறது.

"கனகவரை கங்கை நதி காம்பீலி நாடுசீர் கண்டவோ தனபுரந்தார் வனசமர கதிவாசி வெள்ளானை வளரன்ன மருவுகொடி வேதமுரசந் தினதினமு நீடுசீர்க் கருணீக ராணைத் தசாங்கங் கொடுத்தன்பினாற் றனமதிக மகிழ்வாகி யூகியங் கத்துடன் றணியிற் வாழ்கவென்றார்"

அதுபோல செங்குந்தர் மரபினர்ககுரிய தசாங்கங்களைக் கூறும் நூல் தசாங்கம் நூலாகும். இந்நூல் சத்திய சந்தர் என்பவரால் இயற்றப்பட்டது.

உள்ளடக்கம்

இதில் மலை, ஆறு, நாடு, நகர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்துங் கூறப்படும். இவற்றில் செங்கோல் ஒழிய மற்றைய ஒன்பதும் இரண்டாகக் கூறப்படும் சிறப்பு கவனித்தக்கது. ஒன்று விண்ணரசுக்கும் மற்றொன்று மண்ணரசுக்குமாக அமைக்கப் பெற்றுள்ளன. இதனைச்

என்னும் அடி நன்கு விளக்கும். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பறவையை முன்னிலைப்படுத்திக் கூறப்படுஞ் சிறப்பு பெற்றுள்ளது.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=தசாங்கம்&oldid=17306" இருந்து மீள்விக்கப்பட்டது