தங்கம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தங்கம்
இயக்கம்ஜி. கிச்சா
தயாரிப்புசாகுல் அமீது,
ஜி. கிச்சா
இசைசிறீகாந்து தேவா[1]
நடிப்புசத்யராஜ்
கவுண்டமணி
ஜெயஸ்ரீ
மேக்னா நாயர்
கலையகம்ஸ்ரீ மூவி மேக்கர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 1, 2008 (2008-02-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கம் (Thangam) என்பது 2008 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சத்யராஜ், கவுண்டமணி ஆகியோர் நடித்துள்ளனர்.[2][3]

கதை

கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் ராஜேந்திரநாத் மற்றும் மகாதேவன் தலைமையிலான இரண்டு குடும்பங்களை 'தங்கம்' படம் சித்தரிக்கிறது. தங்கம் (சத்யராஜ்) தில்லி குமாரின் மகன். ஆறுச்சாமி (சண்முகராஜ்) மகாதேவனின் மகன். காளை (கவுண்டமணி) தங்கத்தின் தாய் மாமன்.

தங்கமும் அவனது தங்கை பாக்யலட்சுமியும் (ஜெயஸ்ரீ) பாசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். சகோதரனுக்கு ஏற்ற பெண்ணை (மேகா நாயர்) பாக்கியலட்சுமி பார்த்து வைக்கிறார். தங்கம் தன் தங்கையின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டிய எண்ணத்தோடு இருக்கிறான்.

மணல் திருட்டில் ஈடுபடும் ஊர் மனிதரின் மகன் ஆறுமுகச்சாமியுடன் தங்கத்துக்கு பகை ஏற்படுகிறது. இந்திலையில் தங்கத்தின் தங்கையை ஆறுச்சாமி கெடுத்துவிட, வேறு வழியின்றி தன் தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான்.

திருமண நேரத்தில் ஆறுமுகச்சாமியின் சின்ன வீடு வந்து கலாட்டா செய்ய, அவளைக் கொன்று விடுகிறான் ஆறுமுகச்சாமி. வேறு வழியின்றி தங்கைக்காக அந்தக் கொலைப் பழியை ஏற்று சிறைக்குப் போகிறான் தங்கம். விடுதலையாகி வந்து பார்த்தால் தங்கை பிணமாகிக் கிடக்கிறாள்.

தன் தங்கையின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொன்று தங்கம் பழி தீர்ப்பதுதான் மீதிக் கதை.

நடிப்பு

இசை

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.[1][4]

வரவேற்பு

சிஃபி எழுதினார் " படத்தின் கதை மலைகளைப் போலவே பழமையானது. பி ( ம) சி தரப்பு ரசிகர்களை திருப்தி செய்யும் வெகுஜன மசாலா வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. 80 களில் வெற்றி பெற காரணியாக இருந்த அண்ணன்-தங்கச்சி பாசம், நகைச்சுவை போன்ற சூத்திரங்கள் இந்தபடத்தில் பயன்படுத்தபட்டுள்ளன. " [5] பிஹைண்ட்வுட்ஸ் எழுதிய விமர்சனத்தில் "தங்கம் பழைய மசாலா கொண்ட பழைய கோலிவுட் பார்முலா, அந்த பழைய, அடக்குமுறை ஆணாதிக்க உணர்வுகள் இனிமேல் மினுமினுக்காது என்பதை நிரூபிக்கிறது".[6] Indiaglitz எழுதிய விமர்சனத்தில் "ஒட்டுமொத்தமாக, திரைப்படத்தில் புதியதாகவோ, அல்லது புதுமையானதாகவோ எதுவும் இல்லை. ஆனால் இது ஒரு நகைச்சுவை அம்சத்துடன் பொழுதைபோக்குகிறது ".[7]

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=தங்கம்_(திரைப்படம்)&oldid=33781" இருந்து மீள்விக்கப்பட்டது