அல்லாஹு அக்பர்

தமிழர்விக்கியிலிருந்து
(தக்பீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஒரு இசுலாமியர் தொழுகையின்போது தக்பீர் சொல்ல தனது இரு கைகளையும் உயர்த்துகிறார்.

அல்லாஹு அக்பர் [அரபி:الله أكبر] [ஆங்கிலம்: Allāhu Akbar] என்பது இறைவனே மிகப் பெரியவன் என்னும் பொருள் தரும் அரபு மொழித் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்‌தொடரை இசுலாமியர்கள் பல்வேறு வேளைகளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத்தொடர் மூன்று இடங்களில் வருகிறது.[1] ஈராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாட்டுக் கொடிகளிலும் இத்தொடர் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

  1. திருக்குர் ஆன் (9:72,29:45,40:10)
"https://tamilar.wiki/w/index.php?title=அல்லாஹு_அக்பர்&oldid=258342" இலிருந்து மீள்விக்கப்பட்டது