டெட் ஹேண்ட்
| டெட் ஹேண்ட் | |
|---|---|
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | சனவரி 1985–தற்போது |
| பயன் படுத்தியவர் | |
| உற்பத்தி வரலாறு | |
| எண்ணிக்கை | 1 |
பெரிமீட்டர் என்றும் அழைக்கப்படும் டெட் ஹேண்ட், (Dead Hand, உருசியம்: Система «Периметр», romanized: Sistema "Perimetr", lit. '"Perimeter" System' , GRAU இன்டெக்ஸ் 15E601, சிரிலிக் : 15Э601 உடன்), [1] என்பது பனிப்போர் கால தானியங்கி அல்லது அரை தானியங்கி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும் (கருத்தில் அமெரிக்க ஏ.என்/டி.ஆர்சி-8 அவசர ஏவுகணை தகவல் தொடர்பு அமைப்பைப் போன்றது). இது சோவியத் ஒன்றியத்தால் கட்டமைக்கப்பட்டது.[2] இந்த கட்டமைப்பு சோவியத்துக்குப் பிந்தைய உரஷ்ய கூட்டமைப்பிலும் பயன்பாட்டில் உள்ளது.[3] எதிரி நாட்டு பேரழிவு ஆயுதங்களால் தலைநகரமே அழிந்து, அதிபர், படைத் தளபதி உள்ளிட்டோர் இறந்துவிட்டாலும், கட்டளையிட யாரும் இல்லாத நிலையிலும், நில அதிர்வு, ஒளி, கதிரியக்கத்தன்மை, அழுத்த உணரிகள் மூலம் அணுசக்தித் தாக்குதல் கண்டறியப்பட்டு, எதிர் தாக்குதலாக உருசிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) ஏவத் தொடங்கக் கூடிய ஒரு அமைப்பு ஆகும். பெரும்பாலான தரவுகளின்படி, இது பொதுவாக அணைக்கப்பட்டு நெருக்கடி காலங்களில் மட்டும் தயார் நிலையில் வைக்கப்படும் என்று கருதப்படுகிறது; இருப்பினும், 2009[update] ஆண்டு நிலவரப்படி, இது முழுமையாக செயல்படும் என்றும் தேவைப்படும்போது அதன் நோக்கத்தை நிறைவேற்ற இயலும் என்றும் கூறப்படுகிறது.[4] [5] நாட்டின் தலைமையால் கட்டுப்படுத்தப்படும் இந்த அமைப்பு, ஏவுகணைகளை முழுமையாக தானாகவே ஏவுமா அல்லது இன்னும் மனித ஒப்புதல் செயல்முறையில் உள்ளதா என்பது குறித்த கணிப்புகள் வேறுபடுகின்றன, புதிய சான்றுகள் பிந்தைய முடிவை பரிந்துரைக்கின்றன.
அமைப்பின் கருத்தாக்கம்
இந்த அமைப்பானது பெரும்பாலும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான தாக்குதல் ஏற்பட்டால் மனிதரால் இயக்கப்படாமலேயே தேவையான பதிலடி தாக்குதலைத் தர தானாகவே தீர்மானிக்கும் திறன் கொண்டது.[6]
இந்த அமைப்பை உருவாக்கியவரான விளாதிமிர் யாரினிச்சின் கூற்றுப்படி, இந்த அமைப்பானது நாட்டின் தலைமையால் சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் அவசர முடிவுகளை எடுப்பதற்கு தேவைப்பட்டாத ஒரு தடையாகவும் செயல்படுகிறது. அணு ஆயுதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளைப் பெற்றவுடன், தலைமை இந்த அமைப்பைச் செயல்படுத்தலாம், பின்னர் மேலும் முன்னேற்றங்களுக்காகக் காத்திருக்கலாம், தாக்குதலுக்கு பதிலடிதரும் அதிகாரம் கொண்ட தலைமையின் அனைத்து முக்கிய மனிதர்களையும் அழிந்தால் கூட பழிவாங்கும் தாக்குதலைத் தடுக்க முடியாது என்ற உண்மையால் இது எதிரிக்கு அச்சத்தை தருவதாக உள்ளது. எனவே, இந்த அமைப்பைப் பயன்படுத்துவது என்பது கோட்பாட்டளவில் தவறான எச்சரிக்கையால் தூண்டப்பட்ட பழிவாங்கும் தாக்குதல் வாய்ப்பைத் தடுக்கும்.
செயலூக்கம்
இதே பெயரிலான புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, டெட் ஹேண்ட் அமைப்பின் நோக்கம் என்பது, சோவியத் தலைமையை அழித்தாலும் சோவியத் இராணுவம் அதன் ஆயுதங்களை செலுத்துவதைத் தடுக்க முடியாது என்பதை உறுதி செய்வதன் மூலம் எதிர் அணுகுண்டு தாக்குதல் திறனைப் பராமரிப்பதாக உள்ளது. [2]
1980களில் அமெரிக்கா மிகவும் துல்லியமாக நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) அமைப்புகளை உருவாக்கியதன் பிறகு இந்தப் பிரச்சினை குறித்து சோவியத்தின் கவலை அதிகரித்தது. அதுவரை, அமெரிக்கா பெரும்பாலான அணு ஆயுதங்களை நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் வசதியைக் கொண்டிருந்தது. 1960களின் விண்டேஜ் யுஜிஎம்-27 போலாரிஸ் மற்றும் 1970களின் விண்டேஜ் யுஜிஎம்-73 போஸிடான் போன்ற அமெரிக்க ஏவுகணைகள், எதிராளிக்கு எதிரான தாக்குதலுக்கு மிகவும் துல்லியமற்றதாகக் கருதப்பட்டன. முதல் தாக்குதல் சந்தர்ப்பத்தில் ரேடார் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதியால் எதிரியின் முதல் குண்டு வீச்சுக்கு முன் தாக்குதல் குறித்து 30 நிமிடங்களுக்கு முன்பே எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியம். இது முதல் தாக்குதலை எதிர்கொள்ள வசதியாக இருந்தது. ஏனெனில் எதிராளியால் தனது படைகள் அழிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கவும் எதிர் தாக்குதல் தரவும் நேரம் கிடைக்கும். இதை டிரைடென்ட் சி4 மற்றும் பின்னர், டி5 போன்ற மிகவும் துல்லியமான எஸ்எல்பிஎம்களின் வளர்ச்சி இந்த சமநிலையை சீர்குலைத்தது. ட்ரைடென்ட் டி5, நிலத்தில் இருந்து தாக்கும் எந்த ஐசிபிஎம்-ஐயும் போலவே துல்லியமாகக் கருதப்படுகிறது. எனவே, அமெரிக்க அல்லது இங்கிலாந்து டிரைடென்ட் நீர்மூழ்கிக் கப்பல் அமைப்புகள் எதிரியின் கடற்பகுதியை திருட்டுத்தனமாக நெருங்கி, மிகத் துல்லியமான போர்முனைகளை நெருக்கமான தொலைவில் இருந்து ஏவ முடியும், இதனால் எச்சரிக்கையை மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரமாக குறைத்து, எதிர்ப்படையின் முதல் தாக்குதலை அல்லது தலைமையை அழிக்கும் தாக்குதலை சாத்தியமாக்கியது.
இதனால் சோவியத் ஒன்றியம், அதன் தலைமை திடீர் தாக்குதல் ஒன்றினால் அழிக்கப்பட்டாலும், பதிலடியாக அணுசக்தி தாக்குதல் நடத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தது.[2]
வேலை செய்யும் முறை
அணு ஆயுதப் போர் நடைபெறுவதை உறுதிப்பட்டுத்தியவுடன், இந்த அமைப்பு ஒரு சிறப்பு 15B99 போர்முனையுடன் கூடிய 15P011 கட்டளை ஏவுகணையை அனுப்புகிறது. இது ஆங்காங்கே பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகள் மற்றும் அனைத்து கட்டளை மையங்களுக்கும் பறக்கும் போது பொருத்தமான இயங்க கட்டளைகளை அனுப்புகிறது. கட்டளை ஏவுகணை அமைப்பு அமெரிக்க அவசர ராக்கெட் தகவல் தொடர்பு அமைப்பைப் போன்றதாகும்.
மேற்கோள்கள்
- ↑ Yarynich, Valery E. (20 September 2004). "C3: Nuclear Command, Control Cooperation". Air & Space Power Journal. Archived from the original on 25 May 2015. Retrieved 25 May 2015.
- ↑ 2.0 2.1 2.2 "The Origin of Buzzer Monolyths, The Soviet Nuclear Defense System, and The Myth of the Dead Hand". Numbers stations. The NSRIC. Archived from the original on 1 February 2015. Retrieved 30 January 2015.
- ↑ "Russia, Military Power: Building a Military to Support Great Power Aspirations" (PDF). Defense Intelligence Agency. 2017. Archived from the original (PDF) on 2 December 2019. Retrieved 5 October 2017.
- ↑
- ↑ Hoffman, David E. (2009). The Dead Hand: The Untold Story of the Cold War Arms Race and Its Dangerous Legacy. New York City: Anchor Books. p. 477. ISBN 978-0-307-38784-4.
And it would be wise for Russia to disconnect and decommission Perimeter, the semiautomatic command system for nuclear retaliation.
- ↑ Torchinsky, Jason (April 11, 2017). "The Soviets Made A Real Doomsday Device in The '80s and the Russians Still Have It Today" (in en-US). Foxtrot Alpha இம் மூலத்தில் இருந்து 5 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180405152820/https://foxtrotalpha.jalopnik.com/the-soviets-made-a-real-doomsday-device-in-the-80s-and-1794225196.