டீசல் மரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தீசல் மரம்
தீசல் மரத்தின் பழம்

தீசல் மரம் (Diesel Tree), (ஈருறுப்புப் பெயர்:(Copaifera langsdorffii), இரஷித் மரம் (Rashed Tree) மற்றும் சலாம் மரம் (Salam tree) என்றும் பலவாறாக அழைக்கப்படும் இம்மரம், பேரின தாவரவகையைச் சேர்ந்ததாகும். இது, வெப்பமண்டல மழைக்காடுகளில் பெருமளவில் காணப்படுவதாக அறியப்படுகிறது. மேலும் இந்த மரம், குபா'ய் (kupa'y), கபிசுமோ (cabismo), மற்றும் கோபாவா (copaúva) உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் பல பெயர்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

உயிரியல் விளக்கம்

தீசல் மரம் பொதுவாக 12 மீட்டர்கள் வரை வளரக்கூடிய நடுத்தர மரமாகும், இது வெண்ணிறப் சிருபூக்களும், எண்ணெய் வித்துக்கள் நிறைந்த பழங்ளும் உடையது. இதன் மரகக்ட்டை அடர்த்தியற்று துளைபடும் தன்மையுடன் (porosity) வெற்றிட பின்னமுடைய இலகுவாக காணபடுகின்றது. மேலும், உட்புற நுண்குழாய் வெற்றிடகூட்டு பகுதிகள் எண்ணெய் நிரப்பிகளாக செயல்படுகிறது, மரத்தை எந்த பகுதியில் தட்டி அல்லது வெட்டி கொய்தாலும் எண்ணெய் கசிந்து எளிதில் சேகரிக்க முடியும். எண்ணெய் அதன் உயிர்துடிப்புள்ள உற்பத்தியாக இருந்தாலும் தீசல் மரம், வெப்ப வலயம் அல்லாத பகுதிகளில் நன்கு வளருவதில்லை, மற்றும் உயிரி தீசல் என்பது தட்பவெப்ப நிலையை சார்ந்தது.[4]

பொதுத் தகவல்

பொதுவாக இம்மரம் பசுமையான மழைக்காடு மரமாகும், இது அடர்த்தியான, மற்றும் வட்டமான மகுடம் போன்ற அமைப்புடையது. 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இது, 6 - 18 மீட்டர் வரம்பிற்குள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த மரத்தின் தண்டு 50 - 80 செ.மீ விட்டம் கொண்டதாக இருக்கலாம். நீண்ட வறண்ட காலங்களில் மரங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இலையுதிர் மரமாக மாறக்கூடும். 'கோபைபா தாவரப்பால்' (Copaiba Balsam) என்ற பிசினை விளைவிக்கும் இந்த இனத்தில் உள்ள பல தொடர்புடைய இனங்களில் இந்த இனம் மிகவும் முக்கியமானது. பால்சம் (பால்சம் என்பது, சாம்பிராணி, தாவரப்பால், குங்கிலிய வகை மரம் அல்லது குங்கிலிய வகை நறுமணப் பிசின் போன்ற பல சொற்களைக் குறிக்கும்.) என்பது பல்வேறு மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளைக் கொண்ட ஒரு மதிப்புமிக்க பொருளாகும். இது பொதுவாக காட்டு மரங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Tropical Plant Database | Last updated 12-28-2012 | வலை பார்வை: திசம்பர்-15-2015
  2. Diesel Tree | Queensland Government | Last updated:25 November 2015 | வலை பார்வை: திசம்பர்-15-2015
  3. W e e d r i s k a s s e s s m e n t | Diesel tree | 00 to 12 Pages | வலை பார்வை: திசம்பர்-15-2015
  4. "Diesel tree - Copaifera langsdorfii" (PDF). www.dpi.qld.gov.au (ஆங்கிலம்). 2016. Retrieved 2025-11-03.
  5. "Copaifera langsdorffii". tropical.theferns.info (ஆங்கிலம்). 2024. Retrieved 2025-11-03.
"https://tamilar.wiki/w/index.php?title=டீசல்_மரம்&oldid=384696" இலிருந்து மீள்விக்கப்பட்டது