ஜே. எஸ். ராஜ்புத்
'
ஜே. எஸ். ராஜ்புத் | |
---|---|
ஏப்ரல் 08, 2015 அன்று புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடந்த ஒரு விழாவில், பேராசிரியர் ஜக்மோகன் சிங் ராஜ்புத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பத்மசிறீ விருதை வழங்குகிறார். | |
பிறப்பு | இந்தியா |
பணி | கல்வியாளர் எழுத்தாளர் |
அறியப்படுவது | கல்விச் சீர்த்திருத்தம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு |
விருதுகள் | பத்மசிறீ ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வழங்கிய ஜான் அமோஸ் கொமேனியஸ் பதக்கம் மகரிசி வேத வியாசா விருது |
ஜே. எஸ். ராஜ்புத் ( J. S. Rajput) ( ஜக்மோகன் சிங் ராஜ்புத் எனவும் அறியப்படுகிறார்) ஓர் இந்தியக் கல்வியாளரும் , எழுத்தாளரும் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வின் முன்னாள் இயக்குனரும் ஆவார்.[1] போபாலிலுள்ள பிராந்தியக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருந்த பிறகு, 1988 வரை நிறுவனத்தின் முதல்வராக பணியாற்றினார். பின்னர் இவர் இந்தியாவின் கல்வித் துறை அமைச்சகத்தின் கல்வி இணை ஆலோசகராக நியமிக்கப்பட்டு 1994 வரை பணி புரிந்தார்.[2] தேசிய ஆசிரியர் குழுமத்தின் 1994இல் நிறுவப்பட்டபோது, இராஜ்புத் அதன் நிறுவனர் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1999இல் வரை பணியாற்றினார்.[3] 2004ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் தலைவராக இருந்த காலத்தில், இவர் தொலைநிலைக் கல்வி முறையின் மூலம் இளங்கலை கல்வியியல் கல்வியில் விதிமுறைகளைக் கொண்டு வந்து இரண்டு ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தினார்.[2][2]
இராஜ்புத் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[1][4] ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயற்பியல் மற்றும் கல்வி குறித்த புத்தகங்கள் இந்தியக் கல்வியின் கலைக்களஞ்சியம் (2 தொகுதிகள்)[5] மாறிவரும் உலகில் கல்வி தவறுகள் மற்றும் சக்திகள், கல்வியில் சமகால அக்கறைகள்,[6] தொடக்கக் கல்வியின் உலகமயமாக்கலில் ஆசிரியர் கல்வியின் பங்கு,[7] and Teacher Education in India[8] மற்றும் இந்தியாவில் ஆசிரியர் கல்வி ஆகியவை குறிப்பிடத்தக்கவற்றில் சில.
கௌரவம்
இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக யுனெஸ்கோ 2004 ஆம் ஆண்டில் ஜான் அமோஸ் கொமேனியஸ் பதக்கம் வழங்கி கௌரவித்தது.[9] மேலும் 2010 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் மகரிஷி வேத வியாஸ் விருதைப் பெற்றார்.[2] இலக்கியம் மற்றும் கல்வியில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[10]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "It's Elementary, Minimum Levels of Learning a Must". Indian Express. 30 April 2016 இம் மூலத்தில் இருந்து 1 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160501104526/http://www.newindianexpress.com/magazine/voices/Its-Elementary-Minimum-Levels-of-Learning-a-Must/2016/04/30/article3403563.ece.
- ↑ 2.0 2.1 2.2 "Prof. J.S. Rajput on Sanchi University". Sanchi University. 2016. http://www.sanchiuniv.org.in/pdf/Prof.%20J.S.%20Rajput%20%20CV.pdf.
- ↑ "J. S. Rajput Padma Shri Awarded In 2015". Edubilla. 2016. http://www.edubilla.com/award/padma-shri/j-s-rajput/.
- ↑ J. S Rajput (February 2011). "Public schools practice economic untouchability". Tehelka 8 (5). http://www.tehelka.com/2011/02/public-schools-practice-economic-untouchability/.
- ↑ J. S. Rajput; National Council of Educational Research and Training (India) (2004). Encyclopaedia of Indian Education: L-Z. NCERT. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7450-304-6. இணையக் கணினி நூலக மையம்:56598857.
- ↑ J. S. Rajput (1 January 2009). Contemporary Concerns in Education. Yash Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89537-71-5. https://books.google.com/books?id=40l8QwAACAAJ.
- ↑ J.S. Rajput (January 1994). Universalisation of Elementary Education: Role of Teacher Education. S.Chand and Company. பக். 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0706984651.
- ↑ J. S. Rajput; K. Walia (1 January 2002). Teacher Education in India. Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-2378-8. https://books.google.com/books?id=AdQoaxNhv4AC.
- ↑ "J S Rajput selected for Unesco award". Times of India. 22 July 2004. http://timesofindia.indiatimes.com/india/J-S-Rajput-selected-for-Unesco-award/articleshow/787166.cms.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து 22 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6dE82q6Jm?url=http://www.mha.nic.in/sites/upload_files/mha/files/PadmaAwards-2015_0.pdf.
வெளி இணைப்புகள்
- "Prof. J. S. Rajput (Ex. Director, NCERT) Talks about Guru, Idols and Godfathers". யூடியூப் video (IBN7 Guru Shishya Awards). 25 July 2011. https://www.youtube.com/watch?v=0Sl43UszwR4.* "J. S. Rajput (Ex. Director, NCERT) about Macaulay Education System". யூடியூப் video (Bharat Swabhiman). 9 April 2013. https://www.youtube.com/watch?v=uRta5MRAC2o.
- "Professor J S Rajput for Infinite Institute". யூடியூப் video (Deepak Kumar). 4 February 2016. https://www.youtube.com/watch?v=tHh39YL6u3w.
மேலும் படிக்க
- J. S. Rajput (30 April 2016). "It's Elementary, Minimum Levels of Learning a Must". Article (Indian Express) இம் மூலத்தில் இருந்து 1 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160501104526/http://www.newindianexpress.com/magazine/voices/Its-Elementary-Minimum-Levels-of-Learning-a-Must/2016/04/30/article3403563.ece.
- J. S Rajput (5 February 2011). "Public schools practice economic untouchability". Tehelka 8 (5). http://www.tehelka.com/2011/02/public-schools-practice-economic-untouchability/.