ஜெனரல் குமாரமங்கலம் காலனி
ஜெனரல் குமாரமங்கலம் காலனி ஜி. கே. எம். காலனி | |
---|---|
துணைப் புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′44.3″N 80°13′10.0″E / 13.112306°N 80.219444°ECoordinates: 13°06′44.3″N 80°13′10.0″E / 13.112306°N 80.219444°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | =Tamil Naduதமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 600082 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN 05 - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடக்கு) |
அருகிலுள்ள ஊர்கள் | வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், பெரம்பூர், செம்பியம், ஜவஹர் நகர், திரு. வி. க. நகர், அயனாவரம், பெரியார் நகர் (சென்னை) |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
ஜெனரல் குமாரமங்கலம் காலனி ஆங்கிலத்தில் General Kumaramangalam Colony அல்லது ஜி. கே. எம். காலனி, இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு துணைப் புறநகர்ப் பகுதி. இங்கு குடியிருந்த முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி, ஜெனரல் பரமசிவ பிரபாகர் குமார மங்கலம் அவர்கள் நினைவாக, சுருக்கமாக ஜெனரல் குமாரமங்கலம் என்று அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது, இந்தக் காலனி நகருக்கு. சமீபத்தில், இங்கு புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.[1]
அமைவிடம்
ஜி. கே. எம். காலனி நகரின் அமைவிடம் 13.112291°N80.219447°E
அருகிலுள்ள ஊர்கள்
வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், ஜவஹர் நகர், திரு. வி. க. நகர், செம்பியம், அகரம் (சென்னை), பெரம்பூர், அயனாவரம், பெரியார் நகர் (சென்னை) ஆகியவை ஜி.கே. எம். காலனிக்கு அருகிலுள்ள ஊர்கள்.
கல்வி - பள்ளிக்கூடங்கள்
அரசுப் பள்ளி ஒன்று மற்றும் தனியார் பள்ளிகள் சில உள்ளன.
போக்குவரத்து - பேருந்து போக்குவரத்து
ஜி. கே. எம். காலனிக்கு அருகிலுள்ள நகரப் பேருந்து நிலையங்கள்: பெரியார் நகர் மாநகரப் பேருந்து நிலையம் மற்றும் திரு. வி. க. நகர் மாநகரப் பேருந்து நிலையம்; சென்னை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்று வர, நகரப் பேருந்து சேவைகள் மிக உதவிகரமாக உள்ளன.
தொடருந்து போக்குவரத்து
வில்லிவாக்கம் தொடருந்து நிலையம், பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம், பெரம்பூர் லோகோ வொரக்ஸ் தொடருந்து நிலையம் மற்றும் பெரம்பூர் தொடருந்து நிலையம். மேற்குறிப்பிட்ட தொடருந்து நிலையங்கள் மூலம் இவ்வூர் மக்கள் பயன் பெறுகின்றனர்.
முக்கிய சாலைகள்
ஜி. கே. எம். காலனி பிரதான சாலை, ஜி. கே. எம். காலனி முதல் சாலை முதல் ஜி. கே. எம். காலனி 42-வது சாலை வரை வரிசையாக உள்ள மொத்தம் 42 சாலைகள் இந்நகரை, அருகிலுள்ள வில்லிவாக்கம், பெரியார் நகர், ஜவஹர் நகர், அகரம், கொளத்தூர், பெரவள்ளூர், பூம்புகார் நகர், திரு. வி. க. நகர், செம்பியம், பெரம்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கின்றன.
மருத்துவ வசதி
அருகிலுள்ள பெரியார் நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகள், இங்கு சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
தொழில்கள்
ஜி. கே. எம். காலனிக்கு மிக அருகில் அமைந்துள்ள, பெரம்பூர் 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை' மூலம் இவ்வூர் மக்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜெனரல் குமார மங்கலம் காலனியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 'Tafe' tractors மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், Simpson and Company, Bimetal bearings, Addison Paints and Chemicals தயாரிப்பு தொழிற்சாலை, India Pistons என்ற என்ஜின் பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை என தொழிற்சாலைகள், இந்நகர மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்பட சில காரணிகள்.
வழிபாட்டுத் தலங்கள்
இந்துக் கோயில்கள், கிறித்தவ ஆலயங்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் என மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுத் தலங்கள் உள்ள ஊர்.
மேற்கோள்கள்
- ↑ thinaboomi (13 August 2022). "கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்". thinaboomi (Chennai). https://www.thinaboomi.com/2022/08/13/178858.html.